மேடைப்பேச்சு சிறப்புற அமைவதற்கான வழிவகைகள் யாவை?
நெடுவினாக்கள்
பேச்சுக்கலை
Answers
விடை:
பேசும் பொருளை ஒழுங்குமுறைப்படுத்தல் :
பேசும் பொருளை பேசுவதற்கு முன்பே தொடக்கம், இடைப்பகுதி, முடிவு என் திட்டமிட்டு வரையறை செய்து தொடங்க வேண்டும். திட்டமிடாமல் நினைவு வருவதைப் பேசிவிட்டுச் செல்லுதல் ஒரு பயனையும் தராது.
கேட்பவருக்கு சோர்வு ஏற்படுத்தாமை:
மேடைப் பேச்சுக்குக் கருத்துகளே உயிர்நாடி என்றாலும், அக்கருத்துகளை வெளியிடும் மொழியும் முறையும் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன. பேச்சுக் கலையில் வெற்றி பெற வலிமையான கருத்துகள் தேவை. ஆயினும், அவற்றைக் கேட்டார்ப் பிணிக்கும் வகையில் பேசத் தெரிதல்வேண்டும்.
"கருத்து மின்சாரம் பாயும் கம்பி, மொழி ":
பேச்சாளரின் நெஞ்சிலே உள்ள கருத்து, கேட்பவர்கள் நெஞ்சங்களிலே பாய்தல் வேண்டும். மின்சாரம் பாயக் கம்பி கருவியாய் இருப்பது போலக் கருத்தை விளக்க மொழி, கருவியாய் உள்ளது. ஆதலால், பேசும் மொழி அழகியதாகவும் தெளிவாகவும் சிக்கலற்றதாகவும் இருத்தல் வேண்டும். அழகிய செஞ்சொற்களால் இனிமையாகவும் எளிமையாகவும் நுட்பமாகவும் கருத்தினை உணர்த்தவல்லதே சிறந்த மொழி நடை.
ஆராய்ந்து அளவாய்ப் பயன்படுத்துதல் :
நாம் சொல்லுகின்ற முறையில் அச்சொல்லுக்குத் தனிப்பொருளும் தனிவேகமும் பிறக்கின்றன. உயிரும் உண்டாகின்றது. எனவே, சொல்லை ஆராய்ந்து அறிந்து அளவாய்ப் பயன்படுத்துதல் வேண்டும். சொல் கிடைக்கிறதே என்று நம்மை அறியாமல் அவற்றைக் கொட்டிவிடுதல் கூடாது; கொட்டியதை நம்மால் அள்ள முடியாது.