பேச்சுக்கலையில் மொழியும் முறையும் எவ்வாறு அமைதல்வேண்டும்?
சிறுவினாக்கள்
பேச்சுக்கலை
Answers
Answered by
2
விடை:
பேச்சுக் கலையில் வெற்றி பெற வலிமையான கருத்துகள் தேவை. ஆயினும், அவற்றைக் கேட்டார்ப் பிணிக்கும் வகையில் பேசத் தெரிதல் வேண்டும். மின்சாரம் பாயக் கம்பி கருவியாய் இருப்பது போலக் கருத்தை விளக்க மொழி கருவியாக உள்ளது. ஆதலால், பேசும் மொழி அழகியதாகவும் தெளிவாகவும் சிக்கலற்றதாகவும் இருத்தல் வேண்டும்.
அழகிய செஞ்சொற்களால் இனிமையாகவும் எளிமையாகவும் நுட்பமாகவும் கருத்தினை உணர்த்த வல்லதே சிறந்த மொழிநடை ஆகும். நாம் சொல்லுகின்ற முறையில் அச்சொல்லுக்குத் தனிப்பொருளும் தனிவேகமும் பிறக்கின்றன; உயிரும் உண்டாகின்றது. எனவே, சொல்லை ஆராய்ந்து அறிந்து அளவாய்ப் பயன்படுத்துதல் வேண்டும்.
Similar questions