பெரியபுராணம் - நூற்குறிப்பு எழுதுக.
சிறுவினாக்கள்
பெரியபுராணம்
Answers
Answered by
8
விடை:
தனியடியார் அறுபத்து மூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவார். செயற்கரிய செயல்களைச் செய்து பெருமை பெற்ற சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல் என்பதால் பெருமை பெற்ற நூல் என்னும் பொருள்படும் பெரியபுராணம் என்று பெயர் பெற்றது. இந்நூல், தில்லை நடராசப் பெருமான் ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்கப்பெற்ற பெருமை உடையது.
இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் ‘திருத்தொண்டர் புராணம்’ என்பதாகும். இவரது பாடல்கள் அனைத்தும் தெய்வ மணம் கமழும் தன்மையுடையன. சோழனின் மனதை சீவக சிந்தாமணி நூலில் இருந்து சைவத்தின் பக்கம் திருப்ப சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தார்.
Similar questions