தண்ணீர்ப்பந்தலைக் கண்டு நாவுக்கரசர் வியப்புறக் காரணம் என்ன? அப்பூதியடிகளாரிடம் அவர் யாது வினவினார்?
சிறுவினாக்கள்
பெரியபுராணம்
Answers
விடை:
திங்களூருக்கு வருகை தந்த நாவுக்கரசர், அப்பூதி அடிகளார் அமைத்த தண்ணீர்ப் பந்தலைக் கண்டார். தென்றல் தவழும் குளிர்ச்சியான அதன் சூழலையும், அங்கு வழங்கப்படும் அமுதம் போன்ற தண்ணீரையும் கண்டு வியந்தார். அவ்வியப்புடன் அதைச் சுற்றிப் பார்த்தார்; அதன் எல்லாப் பக்கங்களிலும் 'திருநாவுக்கரசு தண்ணீர்ப்பந்தல்’ என்று தம் பெயர் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு பெருவியப்படைந்தார்.
அவர் அப்பூதியடிகளிடம், "சிவபெருமான் அடியார்களுக்காகத் தாங்கள் அமைத்த தண்ணீர்ப்பந்தலில் தங்கள் பெயரை எழுதாமல் வேறொருவர் பெயரை எழுதக் காரணம் என்ன?” என்று கேட்டார்.
விளக்கம்:
அப்பூதியார் நடராசப்பெருமானிடமும் சிவனடியார்களிடமும் பேரன்பு கொண்டவர்; களவு, பொய், காமம் முதலிய குற்றங்களில் இருந்தும் நீங்கியவர். அப்பூதியடிகள் சைவ சமய குரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசரின் சிவபக்திச் சிறப்பையும், சிவபெருமான் அவருக்கு அருள் செய்த திறத்தையும் கேட்டு, அவரிடம் நிகரில்லா பக்தி உடையவராயிருந்தார். திங்களூருக்கு வருகை தந்த நாவுக்கரசர், அப்பூதி அடிகளார் அமைத்த தண்ணீர்ப் பந்தலுக்கு தம் பெயர் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு வியப்புற்றார்.