English, asked by shanthoshsujatha, 1 month ago

ஏறு தழுவுதல் நிகழ்வு குறித்து கூறும் நூல்கள் யாவை?​

Answers

Answered by jaisakthi23nov
0

Answer:

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பண்பாட்டுத் தொன்மையும் இலக்கிய வளமையும் வாய்ந்தது ____________

விடை : தமிழர் வரலாறு.

2. வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப் படுத்தப்படுபவை ____________

விடை : மாடுகள்

3. ஏறுதழுவுதல், ____________ உணர்த்தும் விளையாட்டு;

விடை : தமிழரின் நாகரிகத்தை

4.____________ நூற்றாண்டுகள் பல கடந்தும் தமிழர்தம் அடையாளமாகவே நிறுவப்பட்டிருக்கிறது.

விடை : ஏறுதழுவுதல்

5. தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான ஏறு தழுவுதல் ____________ ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையுடையது.

விடை : 2000

6. ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் சிற்றிலக்கியம் ____________

விடை : கண்ணுடையம்மன் பள்ளு

7. ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு ____________

விடை : காளைச்சண்டை

II. சிறு வினா

1. எவை எருதுகள் என்று அழைக்கப்பட்டன?

ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் எருதுகள் என்று அழைக்கப்பட்டன

2. ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் வேறு சில பெயர்கள் யாவை?

ஏர் மாடுகள்

எருதுகள்

ஏறுகள்

3. ஏறுதழுவுதல் பற்றி எடுத்துரைக்கும் இலக்கியங்கள் எவை?

கலித்தொகை

சிலப்பதிகாரம்

புறப்பொருள் வெண்பாமாலை

கண்ணுடையம்மன் பள்ளு

4. மாட்டுப் பொங்கல் எதற்காக கொண்டாடப்படுகிறது?

தமிழக உழவர்கள் தங்களின் உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணை நின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப் பொங்கல்.

5. காளைப்போர் இடம் பெற்றுள்ள் வெளிநாட்டுச் சித்திரங்கள் யாவை?

எகிப்தில் உள்ள பெனி – ஹாசன் சித்திரங்கள்

கிரிட் தீவில் உள்ள கினோஸஸ் என்னுமிடத்திலுள்ள அரண்மனைச் சிற்பங்கள்

III. குறு வினா

1. ஏறு தழுவுதல் வேறு பெயர்கள் யாவை?

மாடு பிடித்தல்

மாடு அணைதல்

மாடு விடுதல்

மஞ்சு விரட்டு

வேலி மஞ்சு விரட்டு

எருது கட்டி

காளை விரட்டு

ஏறு விடுதல்

சல்லிக்கட்டு

2. ஜல்லிக்கட்டு – பெயர்க்காரணம் எழுதுக

சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது.

சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்.

சல்லி நாணயங்களை, துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கமும் இருந்ததாலும் ஜல்லிக்கட்டு என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

3. மாட்டுப்பொங்கல் கொண்டாடும் விதத்தினை விளக்குக

மாடுகளைக் குளிப்பாட்டிப் பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங் கயிறு, கழுத்துக் கயிறு, பிடி கயிறு அனைத்தையும் புதிதாக அணிவிப்பர்.

கொம்புகளைப் பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ, துண்டோ கழுத்தில் கட்டுவர்.

பின்னர், பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர்.

4. சிந்துவெளி நாகரிக வரலாற்றில் காளை பங்கு பற்றி விவரிக்க

சிந்துவெளி நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப் பங்கு வகிக்கின்றது.

இம்மக்கள் காளையைத் தெய்வமாக வழிபட்டதை அகழாய்வில் கிடைக்கப் பெற்ற சான்றுகள் வாயிலாக அறிகிறோம்.

சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார.

Similar questions