Chemistry, asked by shubhakmshubha988, 1 month ago

எலக்ட்ரான் கவர் தன்மையை வரையறு​

Answers

Answered by vimaljegim
0

Explanation:

மின்னெதிர்த்தன்மை அல்லது எலக்ட்ரான் கவர் திறன் (Electronegativity) என்பது மூலக்கூறொன்றிலுள்ள ஒரு அணுவானது பிணைப்பிலுள்ள இலத்திரன்களை அல்லது இலத்திரன் அடர்த்தியைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் பண்பாகும். இது பயனுடைய அணுக்கரு (தொழிற்படு கருவேற்றம்) மின்சுமை மற்றும் அணு ஆரம் ஆகியவற்றை மின்னெதிர்த்தன்மை அடிப்படையாகக் கொண்டதாகும். பயனுடைய அணுக்கரு மின்சுமை அதிகரிக்கும்போது மின்னெதிர்த்தன்மை அதிகமாகும். மேலும் அணு ஆரம் குறைவாக இருந்தாலும் மின்னெதிர்த்தன்மை அதிகமாகும். இது இரசாயனவியலில் அணுக்களுக்கிடையேயான இடைத்தொடர்புகளை உய்த்தறிவதற்காகவும், பிணைப்பு வகைகளைக் கண்டறிவதற்காகவும் செயற்கையாக உருவாக்கப்பட்ட எண் பெறுமானங்களாகும். பெரிய எண் பெறுமானம் அதிக மின்னெதிர்த்தனமையைக் குறிக்கின்றது. மின்னெதிர்த்தன்மையை நேரடியாக அளவிட முடியாது. இது அயனாக்கற் சக்தி, இலத்திரன் நாட்ட சக்தி போன்று சுயாதீன அணுக்களின் ஒரு பண்பல்லவென்பதால் இதை அளவிட முடியாது; வெவ்வேறு முறைகளில் கணக்கிடவே முடியும். இப்பெறுமானங்களை முதன் முதலில் லினஸ் பௌலிங் கணக்கிட்டார். இவர் தனது கணிப்பீடுகளுக்காக மூலகங்களின் அணு ஆரை, தொழிற்படும் கருவேற்றம் போன்ற காரணிகளைப் பயன்படுத்தினார். இவர் கணிப்பிட்ட மின்னெதிர்த்தன்மைக்குப் பரிமாணம் கிடையாது. இவ்வெண் பெறுமாணங்கள் பௌலிங் அலகுகளில் குறிப்பிடப்படும். சுயாதீன அணுக்களுக்கு மின்னெதிர்த்தன்மை என்றொரு பண்பு இல்லை. மூலக்கூற்றில் ஏனைய அணுக்களால் சூழப்பட்ட அணு ஒன்றுக்கே மின்னெதிர்த்தன்மை என்னும் ஒரு செயற்கைப் பண்பை வழங்க முடியும். உண்மையில் மின்னெதிர்த்தன்மை சூழ்ந்துள்ள அணுக்களுக்கேற்றபடி வேறுபட்டாலும், இரசாயனவியலில் பயன்பாட்டை இலகுவாக்குவதற்காக ஒரு குறித்த மின்னெதிர்த்தன்மைப் பெறுமானம் ஒவ்வொரு மூலகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. பௌலிங்கின் மின்னெதிர்த்தன்மைப் பெறுமானங்களில் உச்ச பெறுமானமான 3.98ஐ புளோரினும், மிகக்குறைவான பெறுமானமான 0.7ஐ பிரான்சியமும் கொண்டுள்ளது. பௌலிங்குக்குப் பிறகு பலர் பல்வேறு வழிகளில் மின்னெதிர்த்தன்மைப் பெறுமானங்களைக் கணக்கிட்டுள்ளனர்.

எலக்ட்ரான் கவர் திறனை விளக்கும் நிலைமின்னியல் ஆற்றல் வரைபடம்

Attachments:
Answered by presentmoment
9

HCL பலவீன்மான இழுளிசை H ° CI பலமான இழுவிசை

Explanation:

எலக்ட்ரான் கவர்தன்மை:

சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள மூலக்கூறில் உள்ள

ஒரு அணுவானது, பங்கிடப்பட்டுள்ள எலக்ட்ரான் இணையினை

தன்னை நோக்கி கவரும் பண்பு,எலக்ட்ரான் கவர்திறன் எனப்படும்.ஒப்பீட்டு பண்பு.

ஃபாலிங் அளவீட்டு முறை:     எலக்ட்ரான் கவர்தன்மை அளவிடத்தக்க பண்பு அல்ல ஹைட்ரஜன் 2.1 புளூரினுக்கு 4.0

(Xa -Xb) = 0.182\sqrt{Eab - Eaa * Ebb)\frac{1}{2}

மூலக்கூறுகளின்பிணைப்பு பிளவு ஆற்றல்கள்  (Kcal) கொடுக்கப்பட் எந்த ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் கவர்திறன் மதிப்பும் மாறிலியல்ல.

Similar questions