எம்ஜிஇராமச்சந்திரன் பற்றிக் கட்டுரை எழுதுக.
நெடுவினாக்கள்
பாரத ரத்னா எம்.ஜிஇராமச்சந்திரன்
Answers
1952இல் டி.வி.நாராயணசாமி அவர்களால் பேரறிஞர் அண்ணாவிடம் அறிமுகம் செய்யப்பட்டார். அன்று முதல் அண்ணாவின் இதயக்கனி ஆனார். 1967இல் பரங்கிமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1972இல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்து 1977இல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆனார். தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். 1981இல் மதுரையில் ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டினை நடத்தினார். 24.12.1987ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள் படித்து பயன் பெற சத்துணவுத் திட்டத்தினை அமல்படுத்தி சரித்திர நாயகராக இன்றும் வாழ்கிறார். கல்விக்கு முக்கியத்துவம் அளித்து தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை தொடங்கினார். திருச்சியில் பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை துவக்கினார். அன்னை தெரசா பல்கலைக்கழகத்தை துவக்கினார்.
“புரட்சித்தலைவர்”, “பொன்மனச்செம்மல்”, “மக்கள் திலகம்”, “வள்ளல்” என்றெல்லாம் மக்களால் போற்றிப் புகழப்பட்டவர் எம்.ஜி.ஆர். “எம்.ஜி.இராமச்சந்திரன்” என்பதே இவரது இயர்பெயர் ஆனால், புரட்சித்தலைவர் “எம்.ஜி.ஆர்” என்ற மூன்றெழுத்தே தமிழ்நாட்டு மக்களின் மூச்சானது. எம்.ஜி.ஆர் அவர்கள் மக்களாட்சியை மதித்தவர்; மக்களைக் காத்தவர்; மனிதாபிமானத்தின் சிகரம்; தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர்; அதனால்தான் தனக்குப்பின் தன் சொத்துக்களையொல்லாம் வாய் பேச முடியாத, கண்பார்வையற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்கு வழங்கிச் சென்றார்.
மக்களின் மனங்களில் இதய தெய்வமாக போற்றப்படுகிறார். “எம்.ஜி.ஆர் அவர்களின் இதயம், இமயம் போன்றது; அவருடைய உள்ளம் பெரியது; குணம் தங்கம் போன்றது என்று அறிஞர் அண்ணா அவர்களே போற்றிப் புகழ்ந்துரைத்துள்ளார் என்றால் அவரின் பண்புக்கு வேறு புகழுரையும் வேண்டுமா!
1988 ஆம் ஆண்டு மார்ச் 19 இல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஜனவரி 17இல் எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டது. 13.01.1992 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப்படத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், ரூபாய் 1.98 கோடியில் முழுமையாக புனரமைக்கப்பட்ட பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடத்தினை 24.12.1992 அன்று திறந்து வைத்தார்கள்.
முன்னுரை
:
பாரதரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் இலங்கையில் உள்ள கண்டியில், 1917ஆம் ஆண்டு சனவரித் திங்கள் பதினேழாம் நாள் பிறந்தார்; பெற்றோர் கோபாலமேனன், சத்தியபாமா ஆகியோருக்கு ஐந்தாவது மகன் ஆவார். தன்னுடைய இரண்டாவது வயதில் தந்தையை இழந்தார். வறுமையில் துயருற்ற இவரது குடும்பம் தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்திற்கு குடிபெயர்ந்தது.
பள்ளிப்பருவத்தில் கலைப்பணி :
வறுமையின் காரணமாய் இவருக்கும் இவருடன் பிறந்தவர்களுக்கும் பள்ளிப்படிப்பு படிக்க இயலாமல் போனது. இந்நிலையில் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கும் இவரது சகோதரர் சாரங்கபாணி என்பாருக்கும் கிடைத்தது. பள்ளிக்கு செல்லும் வயதில் கலைக்கூடம் சென்றனர். நாடகத்துறையில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.இராமச்சந்திரன், பல ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்புப் பெற்றார். திரைப்படத்துறையில் சிறு சிறு வேடங்களில் நடித்து, படிப்படியாக கதாநாயனாக உயர்ந்தார்.
அண்ணாவின் இதயக்கனி :
அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு எம்.ஜி.ஆர். அரசியலிலும் ஈடுபட்டார். அறிஞர் அண்ணாவின் நெஞ்சம் கவர்ந்தவராக இருந்ததால் இவரை அண்ணா ‘இதயக்கனி’ என்று போற்றினார். அரசியலிலும் ஆர்வமுடன் உழைத்தார். படிப்படியாய் உயர்ந்து, 1963ஆம் ஆண்டு மாநில மேலவை உறுப்பினரானார். பின்பு 1967ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். அறிஞர் அண்ணாவின் மரணத்திற்கு பிறகு அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தினால் தாமே ஒரு தனிக்கட்சியைத் தொடங்கி, 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். அவர் பதினோராண்டு தமிழக முதல்வராய் பணியாற்றினார்.
சத்துணவு என்னும் உயரிய திட்டம் :
இளமையில் எம்.ஜி. இராமச்சந்திரன் வறுமையால் கல்விக் கற்க இயலாமல் போனதால் ஏழை எளிய குழந்தைகளுக்கு பெரும் தலைவர் காமாராஜர் நடைமுறைப் படுத்திய மதிய உணவு திட்டத்தை, தாம் முதல்வராய் இருந்த காலத்தில் சத்துணவுத் திட்டமாக உயர்த்தி செயல்படுத்தினார். பள்ளிச் சிறார்களுக்கு சரிவிகித ஊட்டம் கிடைக்கும் வகையில் இத்திட்டம் இருந்தது.
பட்டங்களும் விருதுகளும் :
எம்.ஜி. இராமச்சந்திரன் மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் பலவற்றை செயலாக்கினார். இவருடைய மக்கள் பணியினைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. இந்திய அரசு இவரது மறைவுக்குப்பின் இவருக்கு பாரத ரத்னா என்றும் உயரிய விருதை வழங்கி சிறப்பித்தது.
பொன்மனச் செம்மல் :
இராமச்சந்திரன் தாம் நடித்த படங்கள் மூலம் சிறந்த பல கருத்துகள் மக்களைச் சென்றடையச் செய்தார். அதனால் அவர் பாமர மக்கள், எளியோர், உழவர், தொழிலாளர் முதலியோரின் செல்வாக்கைப் பெற்றார்; அவர்கள் அவரைப் புரட்சி நடிகர் என்றும், மக்கள் திலகம் என்றும் போற்றினர். எல்லாவற்றுக்கும் மேலாக இவரது செயலாற்றலால் மனம் கவர்ந்த ஏழை எளிய மக்கள் "எம்.ஜி.ஆர்." என்ற பட்டத்தை வழங்கினர். எந்தொரு தலைவரும் அவர்களுடைய மரியாதைக்குரிய அடைமொழிகளை இட்டு முழுப்பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றனர். ஆனால் எம்.ஜி.ராரமச்சந்திரனை மட்டும் மக்கள் தங்களுள் ஒருவராக அவரை மதித்து, எம்.ஜி.ஆர். என்று ஒருமையில் அழைத்தனர். எம்.ஜி. இராமச்சந்திரன் என்று சொன்னால் பலருக்கு தெரியாது.
முடிவுரை :
மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட எம்.ஜி.ஆர், 1987 அன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்து அறிஞர் அண்ணாவின் சமாதிக்கு அருகில் மெரினா கடற்கரையில் உறங்குகிறார்.