India Languages, asked by sumitboro9225, 1 month ago

என்னுயிர் தமிழ் மொழி என்பேன் என்னும் தலைப்பில் நீவிர் கண்டுள்ள மொழி பற்றினை எழுதுக

Answers

Answered by walternayagam
8

Answer:

என்னுயிர் தமிழ்மொழி என்பேன். இளமைப் பருவத்தில் என் நாவை அசைத்துமே மழலையெனும் குழலிசையை வளர்த்த மொழி. அறிவெனும் கண்களை அகலத் திறந்து வைத்து, உலகோடு கலந்து உறவாடச் செய்தமொழி. மங்காத செல்வமாம் சங்க இலக்கியத்தை வாரி என் முன்னே வைத்திட்ட நன்மொழி . கம்பெனும் இளங்கோவும், தம்மிரு தோள்களில் தூக்கி எனை வைத்து வளர்த்திடச் செய்தமொழி. இலக்கணத்தோணியாம் நன்னூலில் எனை ஏற்றி இலக்கியக்கடலினில் உலவிடச் செய்த மொழி. தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தமென அருள்நூல்கள் ஒளியேற்றி வழிகாட்டச் செய்த மொழி. செம்மொழிக்கு உரியதெனும் பதினொரு கோட்பாட்டைத் தன்னகத்தே கொண்டிருக்கும் தன்னிகர் இல்லா‌ மொழி. இன்னும் பற்பல ஏற்றங்களைக் கொண்டிருக்கும் இன்தமிழை என்னுயிர் என்று நான் இயம்பிடத் தயங்குவனோ ?

Explanation:

i hope this answer will helpful to you

mark me as brainliest

Similar questions