இலிண்டகிரென் பண்பு நலன்களை விளக்கி எழுதுக.
நெடுவினாக்கள்
அடித்தளம்
Answers
விடை:
இலிண்ட்கிரென் பண்பு நலன்கள் ஓர் விளக்கம்:
இலிண்ட்கிரெனின் தோற்றம் :
இலிண்ட்கிரென் கால்கள் சூம்பி இருந்தன. அவரால் நடக்க இயலாது; தம் காலிலும் கையிலும் தோலினால் கையுறைகளை அணிந்திருப்பார்; எங்கும் தவழ்ந்தே செல்வார்; இரக்கப்பட்டுப் பிறர் தரும் பணத்தைப் பெற்று வாழ்ந்தார். தன்னம்பிக்க : தம் உடல் குறைபாட்டையோ தமக்கு ஏற்படும் சிரமங்களையோ அவர் பெரியனவாய்க் கருதுவதில்லை. தமக்கு இத்தகைய மோசமான வாழ்வு அமைந்துவிட்டதே என்று சலிப்புக் கொள்வதில்லை, வெறுப்பு அடைவதில்லை. தம்மைவிட மோசமான நிலையில் பலர் இருப்பதாய்க் கூறுவார். அவர்கள் படுகின்ற துன்பங்கள் தமக்கு நேர்வதில்லை என்பார்.
நல்லனவற்றையே காணும் நற்பண்பு :
இந்த உலகம் தம் மேல் கருணை காட்டுவதாயும், தாம் சந்திப்பவர்கள் எல்லாரும் நல்லவராய் இருப்பதாயும் கூறுவார். இவ்வாறு நல்லனவற்றையே பார்க்கின்ற, அந்த அறை சிறியதுதான். அங்கு குள்ளமான இரு நாற்காலிகள், சமைப்பதற்கு ஓர் அடுப்பு, ஓர் அலமாரி ஆகியன மட்டும் இருந்தன. அந்த அலமாரியில் லேபிள்கள் ஒட்டப்பட்ட டப்பாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒருபுறம் மேடு ஒன்று இருந்தது. அம்மேட்டில் படுக்கை சுத்தமாய் அமைக்கப்பட்டிருந்தது. படுக்கை விரிப்பும் தூய்மையாய் இருந்தது. இவ்வாறு தம் இருப்பிடத்தைத் தூய்மையாய் வைத்திருந்த அவரின் பண்பு எவரையும் வியப்படையச் செய்யும்.
கண்டிப்புடன் கூடிய அன்பு :
இலிண்ட்கிரென் குடியிருந்த வீட்டுக்கு உரிமையாளர் மிகவும் கண்டிப்பானவர்; வாடகையைத் தவறாமல் தந்துவிட வேண்டும் என்பார். அவர் இலிண்ட்கிரெனிடம், “என் வீட்டின் அடித்தளந்தான் உனக்குப் பொருத்தமாயிருக்கும். அங்கு, நான் நன்கு அறிந்த, எனக்குப் பிடித்மாணவர்களைக் குடிவைப்பேன். நீ ஏழை என்பதால் வாடகை குறைவாய்த்தான் சொல்லியிருக்கிறேன். அதை உன்னால் தவறாமல் தந்துவிட முடியுமா?" என்று கேட்டார். “நான் உலகில் உள்ள நல்லவர்களை நம்பித்தான் இருக்கிறேன்” என்று இலிட்கிரண் மறுமொழி பகர்ந்ததை அன்புடன் ஏற்றுக்கொண்டு வாடகைக்கு வீடு தந்தார். மேலும் அவ்வப்பொழுது இவருடன் இணைந்து உரையாடி மகிழ்வார்.
உள்ளத்தனைய உயர்வு :
ஒருமுறை “உனக்கு வாழ்க்கை முழுமையானதாயும் அர்த்தமுள்ளதாயும் இருக்கிறதா?” என்று வீட்டுக்காரர் கேட்டதற்கு, "ஆம்" என்று அவர் உறுதியாய்ச் சொன்னார். மகிழ்ச்சியும் நிறைவும் வெளியில் இல்லை; உள்ளத்திலேதான் உள்ளன. நம்பிக்கையோடு வாழ்பவர்க்கு, வேறு எக்குறை இருந்தாலும் அக்குறை பெரிதாய்த் தோன்றாது. இலிண்ட்கிரென் உடற்குறைபாடு உள்ளவர்தாம். எனினும், அவர் தமக்கு இத்தகைய வாழ்வு அமைந்து விட்டதே என்று நொந்து கொள்ளவில்லை; உலகை வெறுப்போடு பார்க்கவில்லை. ‘உலகிலுள்ள அனைவரும் நல்லவர்; நமக்கு உதவி செய்பவர்; நல்லதே நடக்கும்’ என்னும் நல்லெண்ணமும் நம்பிக்கையும் கொண்டவர். வீட்டின் அடித்தளத்தில் வாழ்ந்த அவரின் இந்த நல்ல பண்புகள் மற்றவர்க்கு வழிகாட்டும் அடித்தளமாய் அமைந்து ஒளி வீசின.
நெடுவினாக்கள்
அடித்தளம்