அயோத்திதாசர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு குறித்துக் கட்டுரை எழுதுக.
நெடுவினாக்கள்
அயோத்திதாசப் பண்டிதர்
Answers
விடை:
அயோத்திதாசர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டுகள்:
முன்னுரை :
சாதியால், மொழியால், மதத்தால், இனத்தால், நிறத்தால் என்று மாறுபட்டு மக்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டபோது, ஞான ஒளியாய், இந்நானிலத்தில் உரிமைக்குக் குரல் கொடுத்த நல்லோர்களைத்தாம் நாம் சீர்திருத்தச் செம்மல்கள் எனச் சிந்தை மகிழப் பாராட்டுகிறோம்.
தோற்றம்:
அத்தகைய வரிசையில் 1845-ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து, மாபெரும் மாற்றங்கள் நிகழ்வதற்கு வித்திட்டவரே காத்தவராயன் என்னும் அயோத்திதாசப்பண்டிதர். இவரை மக்கள் எல்லாரும், தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்றனர்.
கல்விநிலை :
பள்ளிப் பருவத்தில் அவரையும் தீண்டாமை என்னும் கொடிய நோய் வாட்டியது. அதுவே பின்னாளில் அதற்கெதிராக போராடும் தைரியத்தை அவருக்கு அளித்தது.
சமூகப்பணி:
தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி வசதியோடு கல்வி உதவித்தொகை அளிக்கவேண்டும் என்றார். கல்வியில் தேர்ச்சி பெற்றவருக்கு அரசு வேலையும், உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பும், பொது இடங்களில் நுழைய உரிமையும், கிராம அலுவலராய் நியமிக்க ஆணைகளும் வேண்டுமெனப் பல்வேறு கோரிக்கைகளைத் துணிவோடு தாமே முன்னின்று வலியுறுத்தி வெற்றி கண்டவர், அயோத்திதாசர். இவர் சாதியால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைத் தரக்குறைவாய் நடத்துவதை எதிர்த்தார்; அவர்களுக்கு உரிய ஊதியம் தராது கால்வாய் வெட்டுமாறு சொல்வதைக் கண்டித்தார்.
அயோத்திதாசர் நீலகிரி மலைப்பகுயில் வாழும் தோடர் இனப்பிரிவில் சாதிமறுப்புத் திருமணம் செய்தார். அதன் பிறகு பத்தாண்டுக் காலம் இரங்கூனில் வாழ்ந்தார். அங்கும் தேயிலை பறிப்போர், விவசாயக்கூலி வேலை செய்வோர், மரம் அறுப்போர் ஆகியோரின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார்.
தாழ்த்தப்பட்டோருக்குத் தனிப்பள்ளி :
அன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டது. அச்சூழலில், பிரம்மஞான சபை ஆல்காட் தொடர்பால், சென்னையில் ஐந்து இடங்களில் ஆல்காட் பஞ்சமர் பள்ளிகள் எனத் தலித்துகளுக்கு இலவசப்பள்ளிகளை நிறுவினார், அயோத்திதாசர்.
இதழ்ப் பணி :
அவர் "ஒரு பைசாத் தமிழன்' என்னும் நாளிதழை நடத்தினார். புதன்தோறும் வெளிவந்த அந்த இதழில் உயர்நிலை, இடைநிலை, கடைநிலை எனப் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் காட்டும் செய்திகளை வெளியிட்டார். புத்தமத நெறியால் கவரப்பட்டு, புத்தரது ஆதிவேதம் எனும் நூலை இருபத்தெட்டுக் காதைகள் கொண்ட பெருநூலாய் எழுதினார். இதற்குச் சான்றாய்ப் பெருங்குறவஞ்சி, வீரசோழியம், நன்னூல் விளக்கம், நாயனார் திரிகுறள், சித்தர் பாடல்கள், வைராக்கிய சதகம், மச்சமுனிவர் ஞானம் முதலிய நூல்களைத் துணை நூல்களாய்க் கொண்டார்.
மேலும், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் துணையாய்க் கொண்டார். இவரின் இந்திரதேச சரித்திரம் நூலும் பாராட்டத்தக்கதே. இவை தவிர, இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறு நூல்களை வெளியிட்டார்; வீரமாமுனிவரைப் போல எழுத்துச் சீர்திருத்தம் செய்துள்ளார்; திருவாசகத்திற்கு உரை எழுதியுள்ளார்.
முடிவுரை :
‘நான் உங்களுக்குச் சொல்லவேண்டியது ஒன்றே. அதாவது உங்களது தருமமும் கருமமுமே உங்களைக் புகழுடம்பு எய்தினார். சமூக ஒருங்கிணைப்பாளராய் வாழ்ந்து மக்களுக்கு உழைத்த உத்தமரைப் போற்றுவோம். அவர் தம் சீரிய செயல்களைத் தொடருவோம்.