நடத்தையியல் புரட்சியினைத் தொடங்கி வைத்தவர்
Answers
நடத்தையியல் (behaviorism, அல்லது behaviourism) என்பது உளவியல் வளர்ச்சியில் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிளை அடித்த ஒரு பகுதி. இதற்கு காரணமானவர் ஜான் பி. வாட்சன் (1878–1958) ஆவார். உளவியலில் வில்ஹெல்ம் வூண்ட் (1832-1920) என்பவரின் கருத்துக்கு எதிராகவே இவர் இதை ஆரம்பித்தார். டிட்ச்னர் என்பவர் வூண்டின் மாணவர். இவர் மனதின் உருவமைப்பைக் கண்டுணரவேண்டும் என உளவியலில் மனதின் "கட்டமைப்பியம்"structuralism த்தை உருவாக்கினார். இவருக்கு ஆதரவாக மனதின் அமைவை உணர வூண்ட் "தற்சோதனை" முறையை உருவாக்கினார். ஆனால் வாட்சன் இதை மறுத்தார். தனியொருவரின் மனநிலையின் உணர்வு, உணர்ச்சி, கவனம், அறிவை ஒருவர் தன்னைத்தானே சோதித்துச் சொல்லும் முறையில் உண்மையிருக்காது. இதை உளவியலிலிருந்தே நீக்கவேண்டும் என்றார். வெளிப்படையாகத் தெரியும் நடத்தையை அறிவியல் முறையில் அளக்கலாமே ஒழிய வெளிப்படையாகத் தெரியாத அகநிலை மனநிலையை அறிவியல் முறையில் அளக்கமுடியாது என உளவியலை வாட்சன் வரையறுத்திருக்கிறார்.