பண்பு எனப்படுவது யாது?
குறுவினாக்கள்
கலித்தொகை
Answers
விடை:
பண்பு எனப்படுவது சான்றோர் வழி அறிந்து நடத்தலாகும்.
விளக்கம்:
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் எனவும், அதாவது உலக நிலைமையறிந்து நடத்தல் எனலாம். உலக நடைமுறையினையும் சமுதாயம் ஒத்துக்கொண்ட நெறிகளையும் பொருந்தி நடத்தலே 'பண்பு' என்று எண்ணப் பெற்றது. எனவே, சமுதாயம் ஏற்றுக்கொண்ட நெறியோடும் உலக நடைமுறையோடும் ஒத்து போகும் நிலை பண்பாடு என்று குறிப்பிடப்படுகிறது.
இத்தகைய பண்பாட்டுச் சிந்தனைகளை நல்கிச் சமுதாயம் செம்மைப்படச் சங்க இலக்கியம் துணை புரிந்துள்ளது. கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையில், தலைவியை மறந்த தலைவன் ஒருவனுக்குத் தோழி கூறும் அறிவுரை பல்வேறு பண்புகளுக்கு விளக்கம் தருவதாக அமைவது சிறப்பிற்குரியது.
"ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல் " எனத் தொடங்கும் என்னும் இந்த பகுதியை, மனித குலத்திற்கு நீதியை புகட்டும் இனியதொரு பண்பாட்டுப் பதிவு எனலாம்.