அறிவு என்பது யாது?
குறுவினாக்கள்
கலித்தொகை
Answers
விடை:
அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்துக் கொள்வதாகும்.
விளக்கம்:
கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. 'கற்றறிந்தார் ஏத்தும் கலி', 'கல்வி வலவர் கண்ட கலி' என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
இதில் அறிவு எனப்படுவது "பேதையர் சொல் நோன்றல்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது உண்மையான பேரறிவு என்பது அறிவற்றவர் என்று தெரிந்தும், அவர் தம் மொழிகளை பொறுத்தருள்வதே ஆகும் (நோன்றல் என்றால் பொறுத்தல் என்பது பொருள்) என கலித்தொகை கூறுகிறது.