வாழ்க்கையில் அனைவரும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றிக் கலித்தொகைப் பாடல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக
நெடுவினாக்கள்
கலித்தொகை
Answers
விடை:
வாழ்க்கையில் அனைவரும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றிக் கலித்தொகைப் பாடல் கூறுவன :
இல்வாழ்க்கை நடத்துதல் என்பது, வறுமையில் வாடுபவருக்கு உதவுதலாகும் .
ஒன்றைப் பாதுகாத்தல் என்பது அன்பு உடையோர் ஒருவரையொருவர் பிரியாதிருத்தல் ஆகும்.
பண்பு எனப்படுவது, சான்றோர் வழி அறிந்து ஒழுகுதலாகும்.
அன்பு எனப்படுவது, தம் சுற்றத்தாரை அரவணைத்து வாழ்தலாகும்.
அறிவு எனப்படுவது, அறிவற்றோர் கூறும் சொற்களைப் பொறுத்தலாகும்.
நெருக்கம் எனப்படுவது, தாம் கொடுத்த வாக்கை காத்து நின்றலாகும்.
நிறைவு எனப்படுவது, மறைக்கப்படவேண்டியவற்றை பிறர் அறியாது காத்தலாகும்
நீதி வழங்குதல் என்பது, பாரபட்சம் பார்க்காது, தவறு செய்தவர் எவரெனினும் தக்க தண்டனை தருதலாகும்.
பொறை எனப்படுவது தம்மை இகழ்வாரைப் பொறுத்தலாகும்.
இத்தகைய பண்பாட்டுச் சிந்தனைகளை நல்கிச் சமுதாயம் செம்மைப்படச் சங்க இலக்கியம் துணை புரிந்துள்ளது. கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையில், தலைவியை மறந்த தலைவன் ஒருவனுக்குத் தோழி கூறும் அறிவுரை பல்வேறு பண்புகளுக்கு விளக்கம் தருவதாக அமைவது சிறப்பிற்குரியது.
"ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல் " எனத் தொடங்கும் என்னும் இந்த பகுதியை, மனித குலத்திற்கு நீதியை புகட்டும் இனியதொரு பண்பாட்டுப் பதிவு எனலாம். இன்றும் இவையெல்லாமே தேவைப்படுகிற அறக்கருத்துக்கள் தான்.