நந்திவர்மன் வீரம் எத்தகையது?
குறுவினாக்கள்
நந்திக் கலம்பகம்
Answers
விடை:
தாமரை மலர் போன்ற நந்திவர்மனின் திருவடிகளைப் பணிந்து வரி செலுத்தாது, அவனை எதிர்க்கும் அறிவற்ற மன்னர், போரில் தம் உயிரை இழந்து, தேவர் உலகத்தை ஆள்வர் என்று நந்திவர்மனின் வீரம் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
விளக்கம்:
"பதிதொரு புயல்பொழி தருமணி" என்று தொடங்கும் நந்திக் கலம்பக பாடல், ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த நந்திவர்மனின் வீரத்தை போற்றும் வகையில் அமைந்துள்ளது.
ஊர்தோறும் மேகங்கள் சொரிகின்ற மணிகளையும், மூங்கில்கள் தந்த பெரிய முத்துக்களையும் கொடுத்து, அவ்வூர்களில் உள்ள நெற்கதிரைத் தொகுத்துக்கொண்டு வருகின்ற நீர், கரையோடு மோதி வழியும் காவிரியின் வளம் பொருந்திய நாட்டையுடையவனே! செல்வத்தைத் தருகின்ற குடையும், நிலமகள் உரிமையும் ஆகியவற்றை உடைய நந்தி மன்னனே ! அறிவில்லாதவரான அரசர், உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்காதவராகி, போரில் தம் உயிரை இழந்து, தேவர் உலகத்தை ஆள்பவராவார் என்று நந்திவர்மனின் வீரம் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.