கலம்பகம் - குறிப்பு எழுதுக.
சிறுவினாக்கள்
நந்திக் கலம்பகம்
Answers
Answered by
13
விடை:
கலம் என்றால் 12. பகம் என்றால் பாதி (6), பன்னிரண்டும், ஆறும் என இரண்டையும் உம்மைத் தொகையாக்கி 18 உறுப்புகளை (புய வகுப்பு, தவம், வண்டு, அம்மானை, பாண், மதங்கியார், கைக்கிளை, சித்து, ஊசல், களி, மடக்கு, ஊர், மறம், பிச்சியார், கொற்றியார், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார், தூது, குறம்) உடைய நூலாகக் கலம்பகம் படைக்கப்பட்டது.
இதனை, கலப்பு + அகம் - (கலம்பகம்) எனப் பிரித்துப் பலவகைப் பாக்களாலும், உறுப்புக்களாலும், பொருளாலும் கலவையாக விளங்குகின்ற இலக்கியத்தைக் கலம்பகம் எனவும் கூறுவர்.
முதல் கலம்பக நூலாக நந்திக் கலம்பகம் என்ற நூல் காணப்படுகின்றது. நந்திக் கலம்பகம் என்ற நூல் பல்லவ மன்னர்களில் ஒருவனாகிய மூன்றாம் நந்திவர்மன் என்பவன் மீது பாடப்பட்டது ஆகும். இந்நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.
Similar questions