குலசேகரர் எவ்வெம் மொழிகளில் வல்லவர்?
குறுவினாக்கள்
நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
Answers
Answered by
1
விடை:
குலசேகரர் வடமொழி, தென்மொழி ஆகிய இரண்டிலும் வல்லவர்.
விளக்கம்:
குலசேகரர் வடமொழி மட்டுமல்ல தென்மொழி ஆகிய இரண்டிலும் வல்லவர்.
குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி என்ற தமிழ் நூலையும்,முகுந்த மாலை என்ற வடமொழி நூலையும் இயற்றியுள்ளார். ஆழ்வார்கள் இந்த மண்ணில் அவதரித்ததற்கு முக்கிய காரணம், வடமொழி வேதத்தைத் தமிழில் அருளிச் செய்வதாகும். குலசேகர ஆழ்வார் தவிர மற்ற எந்த ஆழ்வார்களும் தமிழைத் தவிர வேறு எந்த ஒரு மொழியிலும் எதையும் எழுதியதாக தெரியவில்லை.
இவரது பாடல்கள் நாதமுனிகள் தொகுத்த முதலாயிரம் தொகுப்பில் உள்ளது. இராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள் இவை.
Similar questions