கல்வி செல்வம் கட்டுரை
Answers
உலகில் இருவகையான செல்வங்கள் உள்ளன. ஒன்று எல்லோராலும் மதிக்கப்படும் கல்விச் செல்வம். மற்றையது பொருட் செல்வம் ஆகும். செல்வங்களுள் சிறந்தச் செல்வம் கல்விச் செல்வம். அதனால்தான் வள்ளுவர் "கேடில் விழுச் செல்வம் கல்வி" என்றார். கெடுதல் அல்லது அழிதல் இல்லாத செல்வம் கல்வி என்பதே இதன் பொருள். கல்வி அழிவில்லாதது மட்டுமல்ல; என்றும் நிலைத்து நிற்கக்கூடியது. எந்தவொரு செயலினாலும் அழிக்க முடியாது.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்.
மன்னனுக்குத் தன் தேசமல்லாற் சிறப்பில்லை. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அதாவது கல்வி சிறப்புடையது. கல்வி கற்றவரும் சிறப்புடையவர். மன்னனுக்குத் தனது தேசத்தில் மட்டும் சிறப்பு கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. எனவே ஒரு மன்னனை விடக் கற்றவர் சிறப்புடையவர். ஆகவே எல்லாச் செல்வங்களையும் விடக் கல்விச் செல்வமே உயர்ந்தது.
Hope it is helpful for you
neenga Tamil ah?