பெரியாரைத் துணையாகக்கொள்வதன் சிறப்பு யாது?
சிறுவினாக்கள்
திருக்குறள்
Answers
Answered by
0
விடை:
பெரியாரைத் துணையாகக் கொள்வதன் சிறப்பு :
ஒருவர் பெரியாரைத் துணையாகக் கொண்டால், உலகத்து அரிய பொருள்கள் எல்லாம் எளியனவாகும்.
பெரியார் தமக்கு வரும் துன்பங்களை நீக்குவதற்கும் முன்னறிந்து காப்பதற்கும் தன்மையுடையவர். ஆதலால், பொருள் முதலியவற்றால் உண்டாகிய வலிமையை விடப் பெரியாரின் துணை சிறப்புடைத்தாகும்.
நல்லாட்சி செய்வதற்குப் பெரியாரே சிறந்த துணைவர். ஆகவே, கண்போல் விளங்கும் பெரியாரை மன்னன் துணையாய்க் கொள்ள வேண்டும்.
விளக்கம்:
பெரியாரை துணையாகக் கொள்வதன் சிறப்பை குறள்கள் 443,444 மற்றும் 445 விளக்குகின்றன. அறிவறிந்த பெரியோரைப் போற்றி உறவாகக் கொள்ளுதலே ஒருவர் பெறவேண்டிய அரிய பேறுகளுள் எல்லாம் அரிய பேறாகும் என்று பொருள் கூறும் வகையில் அமைந்துள்ளன.
Similar questions