பெரியாரது இலக்கணம் யாது?
சிறுவினாக்கள்
திருக்குறள்
Answers
Answered by
1
விடை:
பெரியாரது இலக்கணமாக திருக்குறள் கூறுவன :
பெரியார் அறத்தின் நுண்மையை நூல்களாலும் உலகியலாலும் பயிற்சியாலும் அறிந்திருப்பர். அறிவாலும் ஒழுக்கத்தாலும் காலத்தாலும் மேம்பட்டிருப்பர். பெரியார், தமக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்கும் வழி அறிந்து நீக்குவர். அத்தகைய துன்பங்கள் வாரா வண்ணம் வருமுன் அறிந்து காக்க வல்லவர்.
விளக்கம்:
பெரியாரை துணையாகக் கொள்வதன் சிறப்பை குறள்கள் 441 மற்றும் 442 விளக்குகின்றன. அறநெறியை அறிந்து அறிவில் தெளிந்த முதிர்ச்சியுடையோர் நட்பினை ஆராய்ந்து ஏற்று கொள்ளல் நன்மை பயக்கும் என்றும், தமக்கு வந்துள்ள துன்பத்தைப் போக்கி, வருமுன் காப்பவராக இருக்கும் பெரியோரின் நட்பை போற்றி பாராட்டுதல் வேண்டும்.
Similar questions