பொருளீட்டும் நெறியினைத் திருவள்ளுவர் எங்ஙனம் கூறுகிறார்?
சிறுவினாக்கள்
திருக்குறள்
Answers
I can't understand it
விடை:
அறம் அறிந்து பொருள் ஈட்டுவதும், பிறருக்கு தீங்கின்றி அறநெறியில் ஈட்டிய பொருள் தன்னை ஈட்டியவனுக்கு அறம் மற்றும் இன்பத்தையும் கொடுக்கும். அரசு உரிமையால் வந்து சேரும் பொருள், சுங்கப் பொருள், பகைவரிடத்துத் வரியாய்க் கொள்ளும் பொருள் ஆகிய மூன்றும் அரசனுக்குரிய பொருட்களாகுவது நன்னெறியே.
விளக்கம்:
" அறனீனும் இன்பமும் ஈனும் " என்னும் தொடர், கீழ்க்கண்ட குறளில் கையாளப்பட்டுள்ளது.
அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள் - குறள் 754
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப்பட்டு வந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும். நேரிய வழி அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறம் மற்றும் இன்பத்தையும் தரும். தீய வழியின் மூலம் திரட்டப்படாத செல்வம் தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.