உணவாகும் மழை” என்னும் தலைப்பில் விளக்கக் குறிப்புகளுடன் கூடிய படத்தொகுப்பை உருவாக்குக.
Answers
poonavangam Malayalam
உணவாகும் மழை:
நீரும் காற்றும் இருப்பதனால்தான் பூமியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்பது அறிவியல் உண்மை.
உயிர்கள் வாழ மழை அவசியம். மழை பொழிவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது, செடி, கொடி, மரங்கள் தழைக்கின்றன.இயற்கை வளங்கள் செழிக்க முக்கியக் காரணமாக விளங்குகின்றது.
ஒரு நாட்டின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் மழை பெரும் பங்காற்றுகிறது. விவசாயத் துறைக்கு மழை பெரும் தேவை.
மழை, கடல் நீரில் இருந்து உற்பத்தி ஆகிறது. கடல் நீர் ஆவியாகிறது. மேகங்கள் உருவாகின்றது. மேகங்கள் உராயும் போது மழை பொழிகிறது. மழைநீர் பூமியை வந்தடையும்.
ஒரு மனிதன் புவியில் சிறப்புடன் வாழ நீர் இன்றியமையாது. உலகில் நீரில்லாமல் உயிர்கள் வாழ முடியாது.
மழை பொழிவதால் செடி, கொடி, மரங்கள் தழைக்கின்றன. அவற்றை உண்டு மனிதர்களும் மற்ற உயிர்களும் வாழ்கின்றன. தாவரங்களை உண்ணும் விலங்குகளை உண்டு சில உயிரினங்கள் வாழ்கின்றன.இயற்கை சமநிலை அடைகிறது.
மழைநீரின் துணையுடன் செழிக்கும் பயிர்கள் மக்களுக்கு உணவாகி அவர்களை வாழ வைக்கின்றன. எனவே, மழை உணவாகிறது.
#SPJ2