காந்தியடிகள் எதனைப் பாவம் என்கிறார்?
குறுவினாக்கள்
காந்தியம்
Answers
விடை:
காந்தியடிகள் பாவம் என்று கூறியவை:
இந்தியாவில் கோடானு கோடி மக்கள் உண்ணக் கஞ்சியும் உடுக்கக் கந்தையும் இன்றி வாழ்கின்றனர். அந்நிலையில் மன்னர்களும் செல்வர்களும் விலை மதிப்புள்ள அணிகலன்களை அணிந்து கொண்டு பகட்டாய் வாழ்வது பாவம் என்கிறார், காந்தியடிகள்.
விளக்கம்:
காந்தியடிகள் விரும்பியிருந்தால் அரச வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால், எளிமையை ஓர் அறமாய்ப் போற்றிய அவர் மனம், அதற்கு இடம் தரவில்லை; பகட்டான வாழ்க்கையைப் பாவம் என்று கருதினார். "இந்நாட்டில் கோடானுகோடி மக்கள் உண்ணக் கஞ்சியும் உடுக்க உடையும் இல்லாமல் தவிக்கின்றனர்.
அந்நிலையில் மன்னர்களும் செல்வர்களும் விலை மதிப்புள்ள அணிகலன்களை அணிந்துகொண்டு பகட்டாய் வாழ்கின்றனர். இது பாவமாகும். ஏழை மக்களின் காவலர்களாய் இருக்க வேண்டிய அவர்கள் இப்படிச் செய்வது ஏய்த்துப் பிழைக்கும் செயல்," என்றார், காந்தியடிகள்.