India Languages, asked by StarTbia, 1 year ago

காந்தியடிகளின் அறவழிப் போராட்டத்தில் உருவான இயக்கங்கள் யாவை?
குறுவினாக்கள்
காந்தியம்

Answers

Answered by gayathrikrish80
10

விடை:



காந்தியடிகளின் அறவழிப் போராட்டத்தில் உருவான இயக்கங்கள் கதர் இயக்கம், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, உப்பு சத்தியாகிரகம் ஆகியனவாம்.



விளக்கம்:



காந்தியடிகளின் அறவழிப் போராட்டத்தில் வாயிலாக பல இயக்கங்கள் உருவாகின. தீண்டாமைக் கொடுமையை வலுவுடன் எதிர்த்து நிற்க இளைஞர்களைக் கேட்டுக் கொண்டார்.



கொள்கை இல்லாத அரசியல், உழைப்பில்லாத ஊதியம், நாணயம் இல்லாத இன்பம், மனிதநேயம் இல்லாத அறிவியல், அறமில்லாத வழிபாடு ஆகியவற்றால் பயனில்லை என்றார். அவருடைய வாழ்வு முழுவதும் ஈகந்தான் மிகவும் நிறைந்து இருந்தது. உப்புக்காக, உரிமைக்காக, ஒற்றுமைக்காக, சமத்துவத்திற்காக, வன்முறைக்கும், தீண்டாமைக்கும், எதிராகத் தொடர்ந்து போராடியவர் காந்தியடிகள்.


Similar questions