எவற்றை அறநெறியாகப் போற்றவேண்டும் என்று காந்தியடிகள் கூறுகிறார்?
குறுவினாக்கள்
காந்தியம்
Answers
விடை:
காந்தியடிகள் அறநெறியாகப் போற்றியவை:
• உண்மை பேசுதல்,
• பகைவனிடம் அன்பு பாராட்டுதல்,
• நோக்கமும் அவற்றை அடையும் வழிகளும் தூய்மை ஆனவையாய்ப் பிறருக்குத் துன்பம் தராதனவாய் இருத்தல்,
• எளிமையாய் இருத்தல்
ஆகியவற்றை அறநெறிகளாய்ப் போற்ற வேண்டும் என்று காந்தியடிகள் கூறினார்.
விளக்கம்:
அரிச்சந்திரன் நாடகம் பார்த்து "உண்மை பேசுதல்" என்ற அறத்தையும், ‘இயேசுவின் மலைச்சொற்பொழிவு' நூலைப் படித்ததன் மூலம், "பகைவனிடம் அன்பு பாராட்டுதல்" என்பதையும், சிரவண பிதுர்பத்தி என்ற நாடகம் மூலம் "பெற்றோர் மீது அன்பு செலுத்துதல்" என்பதையும் கற்றார் காந்தியடிகள்.
அவர் சிறுவராய் இருந்தபோது கேட்ட ‘தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை; தீமை செய்தவர்க்கும் நன்மையே செய், உண்மைப் பொருண்மை உண்டு’ என்ற குஜராத்தி பாடல் இன்னா செய்யாமை (அகிம்சை) என்னும் கருத்தை அவருள் விதைத்தது.