இராமலிங்கர் எங்கு, எப்போது பிறந்தார்?
குறுவினாக்கள்
திருவருட் பிரகாச வள்ளலார்
Answers
Answered by
0
விடை:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூரில், இராமையா - சின்னம்மை தம்பதியர்க்கு மகனாக, 5-10-1823 அன்று இராமலிங்க அடிகளார் பிறந்தார்.
விளக்கம்:
தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தின் வடமேற்கே இருபது கிலோ மீட்டர் தொலைவில், கடலூருக்கு அருகே அமைந்திருக்கும் மருதூர் என்னும் ஒரு சிறிய கிராமம் உள்ளது .
அந்த ஊரின் கணக்குப்பிள்ளை யாகவும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமைய்யா. இவர் மனைவி சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக 1823-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஞாயிறு மாலை 5.54 மணியளவில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர்.
Similar questions
Math,
8 months ago
Math,
8 months ago
Physics,
8 months ago
India Languages,
1 year ago
Economy,
1 year ago