India Languages, asked by Muthu2004, 11 months ago

தூய்மை இந்தியா கட்டுரை

Answers

Answered by Anonymous
6
தூய்மை இந்தியா தொடங்குவதென்னவோ நம் வாசல் கதவு திறப்பதிலிருந்து தான் !!!

ஒரு நிகழ்வையும் கருத்தையும் பகிரலாமா, வாசகரே! நாங்கள் பணி நிமித்தம் ஒரு பிரசித்தி பெற்ற கோயில் உள்ள நகரில் குடியிருந்தோம். அந்த நகரோ தூய்மைக்குப் பெயர் போனதாகும்(!!!). சாலைகள் முதல் சாக்கடைகள் வரை சுத்தம் ஒரு பைசா தேறாது. வாசல் கதவருகே ஒரு நெகிழிப்பையில் வீட்டுக் குப்பைகளை வைத்து விட்டால், நகராட்சி ஊழியர்கள் காலை ஏழு மணிக்கெல்லாம் குப்பைகளை சேகரித்துச் செல்வர்.

குடியேறிய புதிதில் ஒருநாள் குப்பை வண்டியைத் தவறவிட்டதாய் நினைத்து அக்கம் பக்கத்தினர் அறிவுரைப்படி பக்கத்தில் இருந்த மின்சாரக்கம்பம் அருகே கொட்டச் சென்று குப்பை சேகரிப்பவனிடம் வகையாய் மாட்டிக்கொண்டேன். அந்த ஊழியன் என்னைக் கவனித்து விட்டான். எனக்கு தர்மசங்கடம் ஆகிவிட்டது படித்த நாமே இவ்வாறு நடந்து கொண்டோமே என்று. அது முதல் வண்டியைத் தவற விட்டால், குப்பைகளை அருகே நிலையாய் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியில் போடுவதை வழக்கமாக்கிக் கொண்டோம்.

எங்கள் அண்டை வீட்டார் சிலர் வீட்டின் முன்னோடும் சாக்கடைகளில் மதிய வேளைகளில் குப்பைகளைப் போடுவதைப் பார்த்திருக்கிறேன். பழுதான, பெருக்கப்படாத சாலையோரக் குப்பைகள், நெகிழிக்கழிவுகள் எனப் பல கழிவுகள் அந்த சாக்கடையை நொண்டியாக்கும். விரும்பத்தகாத நாற்றம் மற்றும் நாள்தோறும் கொசுக்களைப் பிரசவிப்பததன் வேலை.மழைக் காலங்களில் நெளியும் புழுக்கள் அதன் இலவச இணைப்பு. அவை வாசல் தாண்டி வீட்டுக் கதவு வரை..... காணக்கிடைக்கும் தரிசனம்! மாலை நேரம் உலாவச் சென்றால் சாலையோரப் புழுதியில் சீரான எந்த முகமும் சுளித்துக்கொள்ளும் (மழைக்காலங்களில் இன்னும் பிரமாதமாய் !). தம் பகுதி சுத்தத்தின் தரம் பற்றி நகராட்சியினரைத் மக்கள் தமக்குள் திட்டிக்கொள்வர்.

அசுத்தம் சகிக்க நன்கு பழக்கப்பட்டவர்கள் தானே நாம் !! ஓராண்டு கழிந்து பணி இடமாற்றம் பெற்று வேறு நகரம் வந்து விட்டோம். விருப்பப்படி ஒரு வீடு பார்த்து, சட்டி சாமான் கொண்டு சேர்ப்பதற்குள் பாடாகி விட்டது(மேல் தளம் வேறு). வளர்ந்து வரும் நகராதலால் அசுத்தம் அதிகமில்லை.

ஒரு நாள் எங்கள் வீட்டின் உரிமையாளரின் மனைவி எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள சாலையைக் கூட்டிக் கொண்டிருந்தார். கேட்ட போது, " நம் வீட்டின் அருகே சாலையோரக் குப்பைகளைக் கூட்டி விட்டால், சாலை சுத்தமாவதோடு, சாக்கடையில் அவை விழுந்து அசுத்தமான நீர் தேங்காது. இங்கு எல்லாரும் இப்படிக் கூட்டிவிடுவார்கள்" என்றார்.மெய் தானே ..! நன்றாக இருக்கிறதே என்று மனதுக்குள் மகிழ்தேன்.

பயன்படுத்திய நொறுக்குத்தீனிகள், உணவுப்பொருட்களின் உறைகளை சாலையோரம் வீசுவது, கண்ட இடத்தில் குப்பைகள் போடுவது, காசு கொடுத்தால் கிடைக்கிறதே என்று தண்ணீர், மின்சாரம், எரிபொருள் இவற்றை மிகையாய்ச் செலவிடுவது, அதிக லாபம் பெறச் சூழலை மாசுபடுத்துவது, அலட்சியமாய் மின்னணுக் கழிவுகளைக் குவிப்பது........

இவற்றில் சிலவற்றிலாவது நமது பங்கு இல்லாதிருக்க வேண்டுமென எப்போது நாம் உணர்வோம் ...வாசக நண்பரே?! பு(ள்)ல் முளைக்கும் பூமியிலிருந்து புதுப்புது நோய்கள் முளைக்கப் பயிரிடுகிறோம் ... நம் தவப்புதல்வனும், செல்லப்பேரனும் செல்லும் பாதைகள் தானே ... நாம் காணும் சாலைகள் !!? பெற்ற அறிவு கொண்டு நல்மாற்றம் அடைவதே மனிதம் அல்லவா..!!!!
Similar questions