1. ஏலாதி __________ நூல்களில் ஒன்று.
1. பதினெண்மேற்கணக்கு 2. பதினென்கீழ்க்கணக்கு 3.காப்பியம்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter3 ஏலாதி -
Page Number 12 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
ஏலாதி பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
விளக்கம்:
ஏலாதி என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கீழ்க்கணக்கு நூல்கள் சங்க மருவியக் காலத்தில் தோன்றியவை. ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி என்ற ஆறு பொருட்கள் சேர்த்து செய்யப்படும் சூர்ணத்திற்கு ஏலாதி என்று பெயர். அதுபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு அறக்கருத்துக்களைக் கொண்டிலங்குவதால் ஏலாதி என்று இந்நூல் பெயர் பெற்றது
ஏலாதி ஆசிரியரின் பெயர் கணிமேதாவியார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதை இவர் நூலில் வலியுறுத்தும் கருத்துக்களைக் கொண்டு எளிதில் அறியமுடிகிறது. இந்நூல சிறப்பு பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எண்பத்தோரு வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
Similar questions