1. மும்பையில் அம்பேத்கர் சிறிதுகாலம் ____________ பேராசிரியராகப் பணியாற்றினார்
1. வாணிகவியல் 2. அறிவியல் 3. பொருளியல்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter11 அண்ணல் அம்பேத்கர்-
Page Number 73 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
மும்பையில் அம்பேத்கர் சிறிது காலம் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
விளக்கம்:
அரசியல், சட்டம், சமூகம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, வாணிகம், கல்வி, சமயம் என எல்லாத் துறைகளிலும் அம்பேத்கர் நிகரற்ற அறிஞராய்த் திகழ்ந்தார். அம்பேத்கர் பொருளியலில் பெரும் புலமை பெற்று விளங்கியதால் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களை அணுகியும் நுணுகியும் ஆராய்ந்து பார்க்க இவரால் இயன்றது; தொழில்துறையில் பொருளாதார வளர்ச்சி அடைவதற்குப் புதிய புதிய கருத்துகளை வெளிப்படுத்தினார்.
இவர் மேலை நாடுகளில் கல்வி பயின்றபோது புகழ் வாய்ந்த பேராசிரியர் பலருடன் நட்புக்கொண்டிருந்தார். இவர் எழுதிய இந்தியாவின் தேசியப் பங்கு வீதம் என்னும் நூல் பொருளாதாரத்தில் சிறந்த நூலாய்க் கருதிப் பொருளியல் வல்லுநர்களும் பேராசிரியர்களும் பெரிதும் மதித்துப் போற்றினார்கள்.
Similar questions