India Languages, asked by tamilhelp, 11 months ago

டிரிட்டிகேல் ஒரு ஹெக்சாபிளாய்டு. கீழ்கண்ட பெற்றோர்களிடமிருந்து கு1 கலப்புயிரியை கண்டறிக.

Answers

Answered by anjalin
0

பெற்றோர் டிரிட்டிகம் டியூரம் (2n = 28) * சிகேல் சிரியேல்  (2n = 4) = ?  

மடியம்:

  • இயற்கையிலேயே சில நேரங்களில் உடலச் செல்களின் குரோமோசோம் எண்ணிக்கையில் சேர்த்தல் (அ) நீக்குதலால் தனித்து (அ) அடிப்படை தொகுதி குரோமோசோம்களில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த நிலைக்கு குரோமோசோம் எண்ணிக்கையில் பிறட்சிகள் (அ) மடியம் எனப்படும்.

மடியம் இரண்டு வகைப்படும்.

அவையாவன,

1. மெய்யிலா மடியம்

2. மெய்மடியம்

மெய்மடியம்:

  • ஒர் உயிரினத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை தொகுதி குரோமோசோம்கள் பெற்றுள்ள தன்மைக்கு மெய்மடியம் எனப்படும்.
  • மெய்மடியானது, ஒற்றை மடியம், இருமடியம் மற்றும் பன்மடியம் என்று வகைப்படுத்தப்படுகிறது.  

ஒற்றை மடியம்:

  • உடலக் குரோமோசோம்களின் பகுதியளவு எண்ணிக்கை கேமீட் குரோமோசோம்களின் எண்ணிக்கையை குறிப்பிடுகிறது.
  • இது ஒரு மடியம் (n) எனப்படுகிறது.

இரு மடியம்:

  • ஒரு உயிரினத்தில் அல்லது உடலச் செல்லில் இரு தொகுதி குரோமோசோம்களை பெற்றுள்ள தன்மைக்கு இருமடியம் (2n)என்று பெயர்.

பன்மடியம்:

  • ஒரு உயிரினத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட அடிப்படை தொகுதி குரோமோசோம்களை பெற்றுள்ள தன்மைக்கு பன்மடியம் எனப்படுகிறது.
  • மூன்று, நான்கு, ஐந்து அல்லது ஆறு அடிப்படை தொகுதி குரோமோசோம்களை பெற்றுள்ளதற்கேற்ப, மும்மடியம் (3X), நான்மடியம் ; (4X), ஐம்மடியம் (5X) மற்றும் அறுமடியம் ; (6X) என்றழைக்கப்படுகிறது.
  • பன்மடியமானது, தன்பன்மடியம் மற்றும் அயல்பன்மடியம் என்று இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

தன்பன்மடியம்:

  • ஒரு உயிரினத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட ஒரு மடிய தொகுதி குரோமோசோம்கள் ஒரே சிற்றினத்திற்குள்ள இருந்து பெறப்பட்டால் தன்பன்மடியம் எனப்படும்.

அயல்தன்பன்டியம்:

  • இரண்டு வெவ்வேறு வகையான சிற்றினங்களிலிருந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை தொகுதி குரோமோசோம்களை பெற்ற உயிரினங்களுக்கு அயல்பன்மடியம் என்று பெயர்.    

நான்மடியம்:

  • இருமடிய கோதுமை மற்றும் ரை தாவரங்களுக்கு இடையேயான கலப்பே நான்மடியமாகும்.

அறுமடியம்:

  • நான்மடிய கோதுமை டிரிடிகம் டியூரம் (மக்ரோனி கோதுமை) மற்றும் ரை தாவரங்களுக்கு இடையேயான கலப்பே அறுமடியம் என்றழைக்கப்படுகிறது.

எண்மடியம்:

  • அறுமடிய கோதுமை டிரிடிகம் ஏஸ்டிவம் (ரொட்டி கோதுமை) மற்றும் ரை தாவரங்களுக்கு இடையேயான கலப்பே எண்மடியம் என்றழைக்கப்படுகிறது.

Attachments:
Similar questions