1. நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
Answers
Answered by
12
Answer:
உங்கள் கேள்வி தெளிவாக இல்லை, எந்த நிலைமை.
Answered by
35
நிலைமம்
- நிலைமம் என்பது ஒவ்வொரு பொருளும் தன் மீது புற விசை ஒன்று செயல்படாத வரை, தன் ஓய்வு நிலையையோ அல்லது சீராக இயங்கி கொண்டு இருக்கும் நேர்க் கோட்டு நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் பண்பு ஆகும்.
ஓய்வில் நிலைமம்
- ஓய்வில் நிலைமம் என்பது நிலையாக உள்ள பொருள், தன் ஓய்வு நிலை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு ஆகும்.
இயக்கத்தில் நிலைமம்
- இயக்கத்தில் நிலைமம் என்பது இயக்க நிலையில் உள்ள பொருள், தன் இயக்க நிலை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு ஆகும்.
திசையில் நிலைமம்
- திசையில் நிலைமம் என்பது இயக்க நிலையில் உள்ள பொருள், தன் திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு ஆகும்.
Similar questions