கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
வாக்கியம் 1: நகர்ப்புற விளிம்பு என்பது நன்கு அறியப்பட்ட நகர்ப்புறப் பயன்பாடுகள் காணப்படும்
நிலத்திற்கும், வேளாண்தொழிலுக்காகஒதுக்கப்பட்டநிலத்திற்குமிடையில்உள்ளமாறுதல்நிகழும்பகுதியாகும்.
வாக்கியம் 2: நகர்ப்புற விரிவாக்கம் அல்லது புறநகர் விரிவாக்கம் என்பது மத்திய நகர்புறப் பகுதிகளிலிருந்து
அடர்த்தி குறைந்த ஒரேயொரு நிலப்பயன்பாடு கொண்ட மற்றும் பொதுவாக மோட்டார் காரை மட்டும் சார்ந்த
குழுக்கள் வாழும் பகுதியில் மக்கள் தொகை விரிவாக்கம் நடைபெறுவதை விவரிக்கிறது. இச்செயல்முறை
புறநகர் விரிவாக்கம் என்றும் அழைக்கப்படும்.
அ) வாக்கியம் 1 சரியானது வாக்கியம் 2 தவறானது.
ஆ) வாக்கியம்1 தவறானது வாக்கியம் 2 சரியானது.
இ) வாக்கியம் 1 மற்றும் 2 சரியானது.
ஈ) வாக்கியம் 1 மற்றும் 2 தவறானவை
Answers
Answered by
0
வாக்கியம் 1 மற்றும் 2 சரியானது
நகர்ப்புற விளிம்பு
- நன்கு அறியப்பட்ட நகர்புறப் பயன்பாடுகள் காணப்படும் நிலத்திற்கும், வேளாண் தொழிலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்திற்கும் இடையில் உள்ள மாற்றம் நிகழும் பகுதிக்கு நகர்ப்புற விளிம்பு என்று பெயர்.
- நகர்ப்புற விளிம்பு பகுதிகளில் கிராம மற்றும் நகர நிலப் பயன்பாடுகள் கலந்து இருப்பதோடு கிராமத்தில் வேளாண் தொழிலுக்காக பயன்பட்ட நிலமானது, நகர்ப்புற குடியிருப்பு அமைக்க பயன்பட்டு வருகிறது.
நகர்ப்புற விரிவாக்கம்
- மத்திய நகர்புறப் பகுதிகளிலிருந்து அடர்த்தி குறைந்த ஒரேயொரு நிலப்பயன்பாடு கொண்ட மற்றும் பொதுவாக மோட்டார் வாகனத்தினை மட்டும் சார்ந்த குழுக்கள் வாழும் பகுதியில் மக்கள் தொகை விரிவாக்கம் நடைபெறுவதை விவரிப்பதே நகர்ப்புற விரிவாக்கம் ஆகும்.
- இச்செயல்முறை புறநகர் விரிவாக்கம் என்றும் அழைக்கப்படும்.
Similar questions