தன்னாட்சி (ஹ�ோம் ரூல்) இயக்கத்தைத் த�ொடங்கியதன் மூலம் திலகரும் அன்னி பெசன்ட் அம்மையாரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை 1916ஆம் ஆண்டுக்குப் பின் எவ்வாறு தக்க வைத்தனர்?
Answers
Answered by
2
தன்னாட்சி இயக்கம்
- திலகர் மற்றும் அன்னிபெசண்ட் அம்மையாரின் தலைமையிலான தன்னாட்சி இயக்கங்களினால் இந்திய தேசிய இயக்கம் புதிய வடிவம் பெற்றது.
- போராட்டங்கள் பொதுப் பாதையினை அமைப்பதற்கான முயற்சியினை நோக்கி சென்றது.
- 1916 ஆம் ஆண்டின் காங்கிரசின் அமர்வு இரு முக்கிய மாற்றங்களுடன் தொடங்கியது.
- தன்னாட்சி இயக்கம் ஆனது தீவிர தேசியவாதிகளையும், மிதவாத தேசியவாதிகளையும் இணைத்தது.
- 1916ல் நடந்த லக்னோ காங்கிரஸ் அமர்வில் கட்சியில் தீவிர தேசியவாதக் குழுக்களை சேர்க்க அனுமதி வழங்கியது.
- பத்திரிக்கை உரைகள், பொதுக் கூட்டங்கள், விவாதங்கள், தன்னாட்சிக்கு ஆதரவான சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றினை முன் வைத்தது.
- இளைஞர்களை அதிகமாக சேர்ப்பது மற்றும் ஊரகப் பகுதிகளில் தன்னாட்சி இயக்கத்தினை கொண்டு சேர்ப்பதில் இரு தன்னாட்சி இயக்கங்களும் வெற்றி பெற்றன.
தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்கள்
- அரசியலமைப்பு வழியில் தன்னாட்சி பெறுதல்.
- கனடா, ஆஸ்திரேலியாவினை போல டொமினியன் அந்தஸ்தை பெறுதல்.
- இலக்கை அடைய வன்முறையற்ற வழிகளை பின்பற்றுதல்.
Similar questions