இந்திய தேசிய காங்கிரஸ் அ) தமது முறையீடுகள் தீர்க்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கையாண்ட வழிமுறைகள் என்ன? ஆ) லால்-பால்-பால் (Lal-Bal-Pal) ஆகிய மூவர் பற்றி அறிந்தது என்ன? இ) இந்திய தேசிய காங்கிரஸின் முதலாவது அமர்வு எங்கு நடந்தது? ஈ) சுதேசி இயக்கம் மீது ஆங்கிலேயர் எவ்வாறு பதில் நடவடிக்கை எடுத்தனர்?
Answers
Answer:
இந்திய தேசிய காங்கிரஸ் (ஆங்கில மொழி: Indian National Congress) ('காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் (I) என்றும் அழைக்கப்படுகிறது, சுருக்கமாக ') இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 15வது இந்திய நாடாளுமன்றத்தில் 206 உறுப்பினர்களை பெற்றிருக்கும் இக்கட்சி, அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.
இந்திய தேசிய காங்கிரஸ்
- ஆங்கிலேய அரசிடம் மேல் முறையீடுகள் செய்வது, மனுக்களை அளிப்பது, அதிகாரப் பகிர்வு முதலியனவற்றினை ஆங்கிலேய அரசு உருவாக்கிய அரசியல் சாசன கட்டமைப்பிற்குள் செய்வது போன்ற வழிமுறைகளை காங்கிரஸ் கட்சி கையாண்டது.
- லால்-பால்-பால் (Lal-Bal-Pal) என குறிப்பிடப்படும் லாலா லஜ்பதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால் ஆகியோர் தீவிர தேசியவாதத்தினை பின்பற்றினர்.
- 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் ஆனது ஒரு அகில இந்திய அமைப்பாக உருவானது.
- இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பில் முதல் பொதுக்கூட்டம் (அமர்வு) 1885 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது.
- ஆங்கிலேயர்கள் சுதேசி இயக்கத்தினை இரும்புக்கரம் கொண்டு அடக்கினர்.
- பத்திரிக்கை சுதந்திரம் முடக்கப்பட்டது.
- முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- புரட்சியாளர்கள் தூக்கில் போடப்பட்டனர்.