புரோநிலை 1-ல் பாக்கிடீன் மற்றும் டிப்ளோட்டீன் பற்றி எழுதுக.
Answers
Answered by
0
Answer:
which language is this????
Answered by
0
பாக்கிடீன்
- பாக்கிடீன் என்ற துணை நிலையில் பைவாலண்ட் குரோமோசோம்களின் நான்கமை நிலை தெளிவாக தெரிகிறது.
- மியாசிஸ் 1ல் ஒவ்வொரு பைவாலண்ட் குரோமோசோம்களும் 4 குரோமாட்டிட்கள், 2 சென்ட்ரோமியர்களை கொண்டு உள்ளது.
- ஒத்திசைவு குரோமோசோமின் சகோதரி குரோமாட்டிட்கள் குறுக்கெதிர் மாற்றம் நடைபெற்ற பகுதியில் மீள் சேர்க்கைக்கு உதவும் இலக்குகள் உருவாகும்.
- பாக்கிடீன் முடிவில் ஒத்திசைவு குரோமோசோம்களுக்கு இடையே மீள் சேர்க்கை நிகழ்வது முடிவுற்றுக் குறுக்கெதிர் மாற்றம் நடைபெற்ற பகுதியில் மட்டுமே குரோமோசோம்கள் இணைந்துள்ள நிலை உருவாகிறது.
- இந்த நிகழ்விற்கு ரிகாம்பினேஸ் என்ற நொதி பயன்படுகிறது.
டிப்ளோட்டீன்
- இந்நிலையில் சினாப்டினிமல் தொகுப்பு கலைந்து கரைகிறது.
- ஒத்திசைவு குரோமோசோம்கள் குறுக்கெதிர் மாற்றம் நடைபெறுவதால் பிணைந்த நிலையிலேயே உள்ளன.
- X வடிவ அமைப்பு கயாஸ்மாக்களில் உள்ளது.
- பால் தன்மை மற்றும் உயிரிகளுக்கேற்ப டிப்ளோட்டீன் என்ற துணை நிலையானது நீடிக்கும்.
- கருவளர்ச்சிக்கான ஊட்டப்பொருட்கள் பெண் கேமீட்டான முட்டையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், படியெடுத்தல் குரோமோசோம்களில் அதிவேகமாக நடைபெறும்.
- இதன் காரணமாக உருவாகும் குரோமோசோம் அமைப்பானது விலங்கு செல்களில் விளக்கு தூரிகை குரோமோசோம் உருவாக பயன்படுகிறது.
Attachments:
Similar questions
Math,
4 months ago
Physics,
4 months ago
Economy,
9 months ago
Math,
9 months ago
Environmental Sciences,
1 year ago