சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
1. இலக்கியவாதியாகவும் திரைப்படக் கலைஞராகவும் சாதித்தவர் ஜெயகாந்தன்.
2. திரைப்படம் ஒரு காட்சி மொழி என்பதை உணர்ந்தவர் பாலு மகேந்திரா.
3. ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானவர் மகேந்திரன்.
4. ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர், நடிகர் எனப் பன்முக தன்மைகொண்டவர்
தங்கர்பச்சான்.
அ) 1, 2, 3 சரி ஆ) 1, 2, 4 சரி இ) 2, 3, 4 சரி ஈ) 1, 3, 4 சரி
Answers
Answered by
0
Answer:
I didn't understand of that language of the question please explain it English
Answered by
0
சரியான கூற்று - ஆ) 1, 2, 4 சரி
ஜெயகாந்தன்
- தமிழ் திரைப்பட உலகில் திரைப் படத்திற்கும், இலக்கியத்திற்கும் ஆன தொடர்பில் சிறந்து விளங்கியவர் ஜெயகாந்தன் ஆகும்.
- உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தில் திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு என அனைத்து பணிகளையும் ஜெயகாந்தனே செய்தார்.
- இவர் இலக்கியவாதியாகவும் திரைப்படக் கலைஞராகவும் சாதித்து காட்டினார்.
பாலு மகேந்திரா
- திரைப்படம் ஒரு காட்சி மொழி என்பதை உணர்ந்தவர் பாலு மகேந்திரா. இவர் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானவர்.
தங்கர்பச்சான்
- ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், இயக்குநர், நடிகர் எனப் பன்முக தன்மைகொண்டவர் தங்கர்பச்சான். இவர் தான் எழுதிய கல்வெட்டு என்னும் சிறுகதையை அடிப்படையாக கொண்டு அழகி என்ற திரைப்படத்தினை எடுத்தார்.
மகேந்திரன்
- இவர் இலக்கியத்தை திரைப்படமாக எடுத்தவர்.
Similar questions
Science,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
4 months ago
Biology,
9 months ago
Math,
1 year ago