பொருத்தி விடை தேர்க. அ) அவன் அவள் அவர் - 1) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் - 2) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை இ) நாம் முயற்சி செய்வோம் - 3) தன்மைப் பன்மைப் பெயர்கள் ஈ) நாங்கள், நாம் - 4) பதிலிடு பெயர்கள் அ) 4, 1, 2, 3 ஆ) 2, 3, 4, 1 இ) 3, 4, 1, 2 ஈ) 4, 3, 1, 2
Answers
Answered by
4
4, 1, 2, 3
அவன் அவள் அவர்
- இடப் பாகுபாடு ஆனது அவன், அவள், அவர், அது, அவை முதலிய பதிலிடு பெயர்களிலும், வினைமுற்றுகளிலுமே வெளிப்படும்.
- பெயர்ச் சொற்களில் இடப் பாகுபாடு வெளிப்படாது.
நாங்கள் முயற்சி செய்வோம்
- உளப்படுத்தாத் தன்மைப் பன்மை என்பது பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது ஆகும்.
- (எ.கா) நாங்கள் முயற்சி செய்வோம்.
நாம் முயற்சி செய்வோம்
- உளப்பாட்டுத் தன்மைப் பன்மை என்பது பேசுபவர் முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பேசுவது ஆகும்.
- (எ.கா) நாம் முயற்சி செய்வோம்.
நாங்கள், நாம்
- நாங்கள், நாம் முதலியன தன்மைப் பன்மைப் பெயர்களுக்கு உதாரணம் ஆகும்.
Similar questions