முச்சந்தி இலக்கியம் என்பது_______. கூற்று 1: கதை வடிவிலான வடிவம் உடையது கூற்று 2: பெரிய எழுத்துப் புத்தகம் என்று அழைக்கப்படுவது அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு ஆ) கூற்று 1, 2 சரி இ) கூற்று 1, 2 தவறு ஈ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Answers
Answered by
2
Explanation:
இது மெல்லிய தாளில், மலிவான அச்சில், பெரிய எழுத்தில், பல்வேறு பொருள்கள் பற்றி 19 -ம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வெளியான வெகுசன இலக்கியம் குறித்த விரிவான ஆய்வு. இவ்விலக்கியத்தின் தன்மை, உருவாக்கம், உள்ளடக்கம், இயற்றியோர், வெளியிட்டோர், பரப்பியோர், வாசகர்கள், வாசிப்பு முறை ஆகியவற்றை இந்நூல் விரிவாக ஆராய்கிறது.
Answered by
2
கூற்று 1, 2 சரி
உணர்ச்சி வெளிப்பாடுகள்
- மக்கள் இயல்பாகத் தங்களின் வாழ்வில் ஏற்படும் தாக்கங்களைப் பாடல்கள், கதைப் பாடல்கள் உள்ளிட்ட இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்தினர்.
- 19 ஆம் நூற்றாண்டில் இறுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சிறு சிறு நூல்களாக இந்த வெளிப்பாடுகள் மெல்லிய தாளில், பெரிய எழுத்தில், மலிவான அச்சில் வெளியிடப்பட்டன.
- இந்த உணர்ச்சி வெளிப்பாடுகள் வெகுசன இலக்கியம், முச்சந்தி இலக்கியம், குஜிலி நூல்கள், காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள், பெரிய எழுத்துப் புத்தகங்கள், தெருப் பாடல்கள் என பலப் பெயர்களில் அழைக்கப்பட்டன.
- இந்த நூல்கள் செவ்வியல் இலக்கிய மரபு பாடாத, சொல்லாத அல்லது புறக்கணித்த கருப்பொருள்களை பாடுபொருட்களாக கொண்டு உள்ளன.
Similar questions