பொருத்துக.
1. சம்பந்தர் - அ) தோழமை நெறி
2. குலசேகராழ்வார் - ஆ) பிள்ளைமை நெறி
3. சுந்தரர் - இ) அடிமை நெறி
4. திருமங்கையாழ்வார் - ஈ) நாயகன் நாயகி நெறி
i) 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 - இ ii) 1 – ஆ, 2 – இ, 3 – அ, 4 - ஈ
iii) 1- இ, 2 – அ, 3 – ஆ, 4 – ஈ iv ) 1- அ, 2 – ஆ, 3 – இ, 4 – ஈ
Answers
Answered by
3
1- ஆ, 2 – இ, 3 – அ, 4 - ஈ
- நாயன்மார்களும் ஆழ்வார்களும் தங்களுக்கு உரிய இறைவனை மனமுருகி போற்றிப் பாடல்கள் பாடுவர்.
- அவர்கள் இறைவனை தனது (ஆண்டான்) முதலாளி, தந்தை, தோழன், நாயகன் என பலவாறு கருதி பாடல்களை பாடினர்.
- இதுவே தாச, சற்புத்திர, சக, ஞான மார்க்கம் என நான்கு மார்க்கமாக தோன்றின.
சம்பந்தர்
- முதல் மூன்று திருமுறைகளை பாடிய திருஞான சம்பந்தர் பிள்ளைமை நெறி (சற்புத்திர) யை பின்பற்றினார்.
குலசேகராழ்வார்
- திருநாவுகரசர், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் போன்றோர் அடிமை நெறி (தாச) யினை பின்பற்றினர்.
சுந்தரர்
- சுந்தரர், திருமழிசை ஆழ்வார் போன்றோர் தோழமை நெறி (சக) யினை பின்பற்றினர்.
திருமங்கையாழ்வார்
- மாணிக்கவாசகர் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் நாயகன் நாயகி நெறி (சக) யினை பின்பற்றினர்.
Similar questions