எந்த தசை தன்னிச்சையற்றதாக செயல்படும்1. வரித் தசைகள்2. மென் தசைகள்3. இதய தசைகள்4. எலும்புச் சட்டக தசைகள்a. 1 மற்றும் 2b. 2 மற்றும் 3c. 3 மற்றும் 4d. 1 மற்றும் 4
Answers
Answered by
0
எந்த தசை தன்னிச்சையற்றதாக செயல்படும் - மென் தசைகள், இதய தசைகள்
மென் தசை அல்லது வரியற்ற தசை
- இந்த தசை கதிர் வடிவில் மையப்பகுதி அகன்றும் முனைகள் குறுகியும் காணப்படும். இதன் மையத்தில் ஒரே ஒரு உட்கரு உள்ளது.
- இத்தசை நார்கள் எந்தவித கோடுகளையோ அல்லது வரிகளையோ பெறவில்லை.
- எனவே இவை மென் தசை அல்லது வரியற்ற தசை என அழைக்கப்படுகிறது.
- இவை உடல் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவது இல்லை. எனவே இது இயக்கு (தன்னிச்சையற்ற) தசைகள் என அழைக்கப்படுகிறது.
இதய தசைகள்
- இது இதயத்திலுள்ள சுருங்கத்தக்க தசையாகும். இதன் நார்கள் உருளை வடிவ, கிளைகள் உடைய, ஒற்றை உட்கருவினை உடையவை.
- இந்த இதயத் தசைகள் தன்னிச்சையற்றது மற்றும் சீரான முறையில் சுருக்கும் தன்மை உடையது.
Similar questions
Science,
7 months ago
Biology,
7 months ago
Social Sciences,
7 months ago
Math,
1 year ago
India Languages,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago