India Languages, asked by StarTbia, 11 months ago

கலித்தொகை _________நூல்களில் ஒன்று.
1பத்துப்பாட்டு 2எட்டுத்தொகை 3.பதினெண்கீழ்க்கணக்கு
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
கலித்தொகை

Answers

Answered by gayathrikrish80
3

விடை:

கலித்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.


விளக்கம்:


சங்கநூல் பட்டியலில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள ஆறாவது நூல் கலித்தொகை. வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்னும் நான்கு வகையான பாக்களில் கலிப்பாவுக்கு இலக்கியமாகத் திகழும் நூல் இது ஒன்றே. இது அகப்பொருள் பாடல்களைக் கொண்டது. கலித்தொகை குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என ஐம்பெரும் பிரிவுகளைக் கொண்டது.


பாடல்கள் அனைத்தும் ஒருவரே பாடியது போன்று ஒரே வகையான மொழிநடை உடையனவாக அமைந்திருப்பினும் ஒவ்வொரு திணைப் பாடலையும் ஒவ்வொரு புலவர் பாடினார் என்று பழம்பாடல் ஒன்று தெரிவிக்கிறது. பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன. இதனைத் தமிழ்ச் சான்றோர் "கற்றறிந்தோர் ஏத்தும் கலி" எனச் சிறப்பித்துக் கூறுவர்.

Similar questions