நெய்தல்கலியைப் பாடியவர் ______________
1ஓரம்போகியார் 2கபிலர் 3நல்லந்துவனார்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
கலித்தொகை
Answers
Answered by
4
விடை:
நெய்தல்கலியைப் பாடியவர் நல்லந்துவனார்
விளக்கம்:
சங்க இலக்கியம் கலித்தொகை பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நெய்தல் திணைக் கலிப்பாப் பாடல்களை நெய்தற்கலி எனக் குறிப்பிடுகின்றனர். இவற்றைப் பாடிய புலவர் நல்லந்துவனார். நல்லந்துவனார் சங்க காலத்தவர். இவரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
இவர், நெய்தல் கலியில் முப்பத்து மூன்று பாடல்களைப் பாடியுள்ளார். இவை கலித்தொகை நூலில் 118 முதல் 150 எண்ணுள்ள பாடல்களாக வைக்கப்பட்டுள்ளன. கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே என்பர்.
இவரது பாடலில் சொல்லப்பட்ட சொல்-விளக்கங்கள் இன்றும் பலராலும் எடுத்தாளப்படுகின்றன. இவரது பாடல்கள் தமிழரின் பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாட்டைக் காட்டும் வரலாற்றுச் சுவடுகள். மேலும் புராணச் செய்திகளின் புலியாக இவர் விளங்குகிறார்.
Similar questions