India Languages, asked by StarTbia, 1 year ago

கலம்பகம் ____________ வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
1தொண்ணூற்றாறு 2பதினெட்டு 3பத்து
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
நந்திக் கலம்பகம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


கலம்பகம் தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.


விளக்கம்:


கலம் + பகம் - கலம்பகம். கலம் - பன்னிரண்டு, பகம் - ஆறு. 12 + 6 = 18 உறுப்புகளைக் கொண்டதால் இது கலம்பகம் எனப்பட்டது. இதனை கலப்பு + அகம் - (கலம்பகம்) எனப் பிரித்துப் பல்வகைப் பாவும் பாவினங்களும் கலந்துவரும் நூலாதலின், இஃது இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.


தமிழில் உருவான முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் ஆகும். தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் வீரத்தை பாடுபொருளாக வைத்து பாடப்பட்ட காரணத்தினால் நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது.  இந்நூல் கி.பி.9ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

Similar questions