தமிழர்கள் நிலத்தை __________ வகையாகப் பிரித்துக்காட்டியிருக்கிறார்கள்.
1மூன்று 2ஆறு 3ஐந்து
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்
Answers
Answered by
0
விடை:
தமிழர்கள் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார்கள்.
விளக்கம்:
தமிழர், தம் வாழிடங்களை நிலத்தின் தன்மைக்கேற்பப் பாகுப்படுத்தியுள்ளனர். அவையே ஐவகை நிலங்கள். தமிழர், நிறத்தின் அடிப்படையில் செம்மண் எனவும், சுவையின் அடிப்படையில் உவர்நிலம் எனவும், தன்மையின் அடிப்படையில் களர்நிலம் எனவும் நிலத்தினை வகைப்படுத்தி உள்ளனர்.
குறுந்தொகை இதுபற்றிச் செம்புலப் பெயல்நீர் போல எனக் கூறும். உவர்நிலம் மிகுந்த நீரினைப் பெற்றிருந்தும் பயன் தருவதில்லை. புறநானூறு இதுபற்றி ‘அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்’ என்று கூறுகிறது. களர்நிலம் எதற்கும் பயன்படாது. திருக்குறள் இதுபற்றிப் பயவாக் களரனையர் கல்லாதவர் என்று இயம்புகிறது.
Similar questions