சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1) ' நெறி' என்னும் சொல்லின் பொருள் யாது? அ) வழி ஆ) குறிக்கோள் இ) கொள்கை ஈ) அறம் 2) 'உவமைக் கவிஞர்' என அழைக்கப்படுவர் யார்? அ) முடியரசன் ஆ) சுரதா இ) வாணிதாசன் ஈ) பாரதிதாசன் 3) குற்றியலுகரத்தின் வகைகள் மொத்தம் எத்தனை? அ) ஐந்து ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஆறு 4) முதலெழுத்துகளின் எண்ணிக்கை -------- அ)18 ஆ) 30 இ) 12 ஈ) 16 5) நாவற்பழத்திற்கு உவமையாக கூறப்படுவது எது ? அ) பச்சை இலை ஆ) கோலிக்குண்டு இ) பச்சைக்காய் ஈ) பழம் 6) ' தன் + நெஞ்சு ' -- என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது எது ? அ) தன்நெஞ்சு ஆ) தநெஞ்சு இ) தன்னெஞ்சு ஈ) தனேஞ்சு 7) ' யாண்டு ' என்பதன் பொருள் யாது? அ) எனது ஆ) எங்கு இ) இவ்வளவு ஈ) எது 8) ' தேசியம் காத்த செம்மல்' எனப் பசும்பொன் முத்துராமலிங்கரைப் பாராட்டியவர் யார்? அ) இராஜாஜி ஆ) பெரியார் இ) திரு. வி.க ஈ) காந்திஜி 9) ' சோம்பல்' என்னும் சொல்லின் எதிர்ச்சொல் எது? அ) அழிவு ஆ) துன்பம் இ) சுறுசுறுப்பு ஈ) சோகம் 10) ' தஞ்சாவூரை தஞ்சை ' என வழங்குவது ------------ அ) குழூஉக்குறி ஆ) இலக்கணப்போலி இ) மரூஉ ஈ) இடக்கரடக்கல் ஆ) கோடிட்ட இடத்தை நிரப்புக 1) ஒலியின் வரி வடிவம் ------------- 2) பகைவரை வெற்றிக் கொண்டவரைப் பாடும் இலக்கியம் ---------------- 3) காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என்று அழைக்கப்படும் விலங்கு ------------- 4) ஔ - காரத்தின் இன எழுத்து -------------- 5) நாமக்கல் கவிஞரின் சுய சரிதை நூல் -------------- 6) இரண்டாம் வேற்றுமையின் உருபு ------------ 7) சொல்லின் முதலில் மட்டும் இடம்பெறும் குறுக்கம் ---------------- 8) ' சொல்லின் செல்வர் ' என அழைக்கப்படுபவர் -------------- 9) ' பரி' என்ற சொல்லின் பொருள் ------------- 10) வெண்பாவின் ஓசை ----------------- இ) பின்வரும் பாடலைப் படித்து அதன் கருத்தை எழுதவும் " அன்பும் அறனும் ஊக்கி விடும் அச்சம் என்பதைப். போக்கி விடும் இன்பம் பொலிகிற வானொலியாம் எங்கள் தமிழெனும் தேன் மொழியாம் ஈ ) பொருந்தாத சொல்லை எடுத்து எழுதுக 1) மயில் , யானை , கிளி , குயில் 2) விடுதி , மரம் , பூ , கனி 3) பாக்கு , பஞ்சு , பாட்டு , பத்து 4) அரசு , எய்து , மூழ்கு , மார்பு 5 ) பகலவன் , சூரியன் , திங்கள் , ஞாயிறு உ) பொருத்துக 1) எரா _ திசைக்காட்டும் கருவி 2) பருமல் -- அடிமரம் 3) மீகாமன் -- குறுக்குமரம் 4) காந்த ஊசி -- கப்பலை செலுத்துபவர் 5) இயற்சொல் -- சோறு ஊ) குறிப்புகளைக் கொண்டு ' மா ' என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டறிந்து கட்டங்களை நிரப்புக. 1) முக்கனிகளுள் ஒன்று -- 2) கதிரவன் மறையும் நேரம் -- 3) பெருந்திரளான மக்கள் கூடும் நேரம் ---- 4) எழுத்துகள் ஒலிக்க ஆகும் கால அளவு --- 5) அளவில் பெரிய நகரம் ---- எ) அகர வரிசைப்படுத்துக . 1) பெண்கள் , பாரதம் , புதுமை , பீலி , பேருந்து , பூமி , பழங்கள் , பொதுக்கூட்டம் , பையன் , போக்குவரத்து , பின்னிரவு , பௌர்ணமி ஏ) கீழ்க்கண்ட சொற்களிள் உள்ள உயிர் மெய் எழுத்தைப் பிரித்து எழுதுக. 1) தமிழ் 2) குடம் 3) போட்டி 4) பாடம் 5) கல்வி ஐ) சரியா , தவறா என எழுதுக 1) பேச்சு மொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம் . 2) நீண்டு ஒலிக்கும் எழுத்துகள் குறில் எழுத்துகள் ஆகும். 3) ' கழனி' என்னும் சொல் ' துன்பம் ' எனப் பொருள் படும் . 4) உயிர் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை 247 ஆகும் . 5) ' இன்னல் ' என்னும் என்னும் சொல் ' துன்பம் ' எனப் பொருள் படும். ஒ ) ஓரிரு வரிகளில் விடை தருக. 1) மொழியின் வடிவங்கள் எத்தனை ? 2) போலி எத்தனை வகைப்படும் ? 3) சுரதாவின் இயற்பெயர் யாது ? 4) வாய்மை என்பது எது? 5) முண்டந்துறை புலிகள் காப்பகம் ' எங்கு ' உள்ளது ? 6) இராஜமார்த்தாண்டன் நடத்திய இதழின் பெயர் என்ன ? 7) திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் எத்தனை ? 8) ' கட்ட ப் பொம்மு ' கதைப்பாடலை எழுதியவர் யார் ? 9) இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ? 10) குற்றியலுகரம் பிரித்து எழுதுக.
Answers
Answered by
1
மொழியின் வடிவங்கள் எத்தனை ? 2) போலி எத்தனை வகைப்படும் ? 3) சுரதாவின் இயற்பெயர் யாது ? 4) வாய்மை என்பது எது? 5) முண்டந்துறை புலிகள் காப்பகம் ' எங்கு ' உள்ளது ? 6) இராஜமார்த்தாண்டன் நடத்
Similar questions
Environmental Sciences,
2 days ago
Hindi,
2 days ago
Social Sciences,
2 days ago
English,
4 days ago
Math,
4 days ago
Biology,
8 months ago
Math,
8 months ago