*ஒரு_சின்ன_கணக்கு*
ஒரு மருமகன் தன் மாமனாரிடம் 1 லிருந்து 31 தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டிற்கு வருவேன். என்றைக்கு நான் வருகிறேனோ அந்த நாளின் எடைக்கு ( 5ஆம் தேதி என்றால் 5கிராம், 18 ஆம் தேதி என்றால் 18 கிராம்) எனக்கு தங்க நாணயம் தரவேண்டும் என்றார். மாமனாரும் ஒத்துக்கொண்டார்.
அவர் பத்தர் கடைக்கு சென்று விஷயத்தை சொல்லி காசுகள் செய்யச்சொன்னார்
பத்தர் கடைக்காரர் கணக்கில் சிறந்தவர் என்பதால் வெவ்வேறு எடையுள்ள 5 நாணயங்களை மட்டுமே செய்து கொடுத்தார். அதை வைத்து என்றைக்கு வந்தாலும் கொடுத்துவிடலாம். அந்த 5 நாணயங்கள் ஒவ்வொன்றின் எடை என்ன?
Answers
Answered by
55
Answer:
1,2,4,8,16 கிராம்
Answered by
0
அந்த ஐந்து நாணயங்களின் எடைகள் ஒன்று, இரண்டு, நான்கு, எட்டு, பதினாறு கிராம் ஆகும் .
- இந்த ஐந்து நாணயங்களை வைத்து, 31 நாட்களில் எந்த நாள் சென்றாலும் மருமகனின் கோரிக்கை ஏற்ற வகையில் கொடுக்க இயலும்.
- உதாரணமாக, மருமகன் 13 வது நாளில் வந்தால் 8,4,1 தங்க நாணயங்களை கொடுக்கலாம்.
- இப்படி 31 நாட்களுக்கும் அவரால் நிர்வகிக்க முடியும்.
ஏனெனில், அந்த ஐந்து நாணயங்களின் எடைகள் ஒன்று, இரண்டு, நான்கு, எட்டு, பதினாறு கிராம் ஆகும்.
#SPJ2
Similar questions