World Languages, asked by dkarthick318, 5 months ago

1. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயர்ச்சொல்​

Answers

Answered by thahanifaiha
5

Answer:

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது சில சொற்களின் இலக்கண குறிப்பு. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பது எதிர்மறையான பொருளில் வரும் ஒரு வினைச்சொல், அதன் கடைசி எழுத்து இல்லாமல் (ஈறு = கடைசி; கெட்ட = இல்லாமல்) வந்து, அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு விளக்கம் தருவதாக அமையும் சொல். எடுத்துக்காட்டுகள்:

செல்லாக் காசு (= செல்லாத காசு.) என்பதில் செல்லா என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். செல்லும் என்பது உடன்பாட்டு பொருள். செல்லாத என்பது எதிர்மறைப் பொருள். செல்லாத என்னும் சொல், செல்லாதது என்று முடிவு பெறாமல் எச்சமாக வரும் வினைச்சொல். செல்லா என்பது செல்லாத என்னும் சொல்லின் கடைசி எழுத்தாகிய த இல்லாமல் (கெட்டு) வருவது. மேலும் செல்லா என்னும் சொல், காசு என்னும் பெயர்ச்சொல்லைப் பற்றிக் கூறவந்த வினைச்சொல். எனவே செல்லாக் காசு என்னும் தொடரில், செல்லா என்னும் சொல்லை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று கூறுவர்.

பிற எடுத்துக்காட்டுகள்: வணங்காத் தலை, அழியாப் புகழ், கேளாச் செவி, ஓயாத் தொல்லை

இப்படி ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும் என்னும் இலக்கண விதியின் படி செல்லாக் காசு, அழியாப் புகழ், கேளாச் செவி, ஓயாத் தொல்லை என்று வல்லின ஒற்று[1] மிகுந்து (= கூடுதலாக) வரும்.

Explanation:

mark me as soon as brainliest ☺️☺️

Similar questions