Social Sciences, asked by Raniiniya, 4 months ago

1..
ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறுகுறிப்
தருக
?​

Answers

Answered by stusivaharini5028
1

Answer:

ஆவணக் காப்பகம் அல்லது ஆவணகம் என்பது, ஒரு நாடு, சமூகம் அல்லது ஒரு நிறுவனத்தின் வரலாற்று ஆவணங்களைப் பல்வேறு தேவைகளுக்காகப் பாதுகாத்து வைக்கும் ஒரு இடமாகும். பல ஆவணக் காப்பகங்கள், நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஆவணங்களைப் பாதுகாத்து வருகின்றன. இதனால் இவை அந் நாடுகளினதும், சமுதாயங்களினதும் நினைவுகளைப் பொதிந்து வைத்திருக்கின்றன என்று கூற முடியும். "மக்களுடைய நடவடிக்கைகள், கொடுக்கல் வாங்கல்கள் போன்றவற்றுக்கான சான்றுகளைச் சேகரித்து வைத்திருப்பதன் மூலம், ஆவணக் காப்பகங்கள், நிர்வாகத்துக்கு உதவி செய்வதுடன், தனிப்பட்டவர்களினதும், நிறுவனங்களினதும், நாடுகளினதும் உரிமைகளுக்கு அடிப்படியாக அமைந்துள்ளன" என்றும், "நாட்டு மக்கள், அதிகாரபூர்வத் தகவல்களையும், தமது வரலாறு தொடர்பான தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் உரிமையை உறுதி செய்வதன் மூலம், ஆவணக் காப்பகங்கள், குடியாட்சி, பொறுப்புத் தன்மை, நல்ல நிர்வாகம் ஆகியவற்றுக்கு அடித்தளமாக அமைவதாகவும், ஆவணக் காப்பகங்களின் அனைத்துலக சபையின் இணையத் தளம் சுட்டிக் காட்டுகின்றது.

Similar questions