1. தொலைக்காட்சி குளிரூட்டும் கருவி செல்பேசி கணினி முதலியவற்றைப் பழுது பார்க்கும் படிப்புகளும் உள்ளன.
நிறுத்தக்குறி இடுக / Mark punctuations
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
235 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
36 பல்துறை வேலைவாய்புகள், 235 தமிழ் நாடு எஸ்.சி.யி.ஆர். டி பத்தாம் வகுப்பு தமிழ்.
விடை:
தொலைக்காட்சி, குளிரூட்டும் கருவி, செல்பேசி, கணினி முதலியவற்றைப் பழுது பார்க்கும் படிப்புகளும் உள்ளன.
விளக்கம்:
கருத்துக்களை வெளிப்படுத்தவும் விளக்கவும் எழுதும் பொழுது பல்வேறு குறிகளைப் பயன்படுத்துகின்றோம். இவ்வாறு குறிகள் இடுவதை நிறுத்தக் குறியீடு (punctuation) என்று கூறுகின்றோம். இந்த நிறுத்தக் குறிகள் சொற்றொடர்களைப் பிரித்துக் காட்டவும் பொருளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் பெரிதும் உதவுவனவாக உள்ளன. படிப்பவருடைய கவனத்தை ஈர்ப்பதற்கும் நிறுத்தக் குறிகள் மிகவும் பயன்படுகின்றன.
ஐரோப்பியர்களே பல்வேறு நிறுத்தற் குறியீடுகளை நமக்கு அறிமுகப்படுத்தி, எவ்வெவ்விடங்களில் எந்தெந்த குறியீட்டைப் பயன்படுத்த வேண்டுமென விளக்கினர். நிறுத்தக் குறியீடுகளைப் பயன்படுத்துகையில் தமிழ்மொழி இலக்கணத்திற்குக் கேடு நிகழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுவதும் இன்றியமையாததாகும்.