History, asked by wwwswetha597, 5 months ago

1.
'சீட்டுக்கவி' என்று அழைக்கப்படுபவர் யார்?
. DUDA
2.
உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர்' யார்?
3.
'காந்தியக் கவிஞர்' என்பவர்?
4.
'சிலம்புச் செல்வர்' என்று போற்றப்படுபவர்?​

Answers

Answered by sona121416
0

சிலம்புச் செல்வர்' என்று போற்றப்படுபவர்? மா.பொ.சிவஞானம்

Answered by logaprabhasl
0

Answer:

1. சீட்டுக்கவி என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். இது கவியரசர் ஒருவர் முடியரசர் அல்லது வள்ளல் ஒருவருக்கு தனக்கோ அல்லது பிறருக்கோ உதவி செய்யுமாறு கேட்டு அனுப்பும் விண்ணப்பக்கவி ஆகும். இதில் கவிஞரின் புகழும் வள்ளலின் புகழும் பாடப்படும்.

2. உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் மு. வரதராசனார்.

3. காந்தியக் கவிஞர்' என்பவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

4. 'சிலம்புச் செல்வர்' என்று போற்றப்படுபவர் ம. பொ. சிவஞானம்.

Explanation:

  • மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமின்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
  • நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர்.
  • ம. பொ. சிவஞானம் (Ma.Po.Sivagnanam, 26 சூன் 1906 – 3 அக்டோபர் 1995) 1956-ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாகப் போற்றப்படுபவர் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அறியப்படுபவர்.சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.

#SPJ2

Similar questions